அது எப்படிங்க இன்ஜினியரிங் காலேஜ்ல டாக்டர் படிச்ச பொண்ணு; ராம் கோபால் வர்மாவை ஓட்டிய ரசிகர்கள்!

மும்பை: தனது முன்னாள் காதலியை அறிமுகப்படுத்திய இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து தள்ளி விட்டனர்.

அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வரும் அவரைத் தான் நான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு தலையாக காதலித்தேன் என ராம் கோபால் வர்மா ட்வீட் போட ஆரம்பித்தது இந்த ட்ரோல்.

பொறியியல் கல்லூரியில் மருத்துவ மாணவி எப்படி சார் படிச்சாங்க என நெட்டிசன்கள் சர்ச்சை இயக்குநரையே சல்லி சல்லியாக நொறுக்க அதற்கும் அவர் அடடே விளக்கம் கொடுத்து அந்த ட்வீட்டை பின்னர் டெலிட் செய்து விட்டார்.

முன்னாள் காதலி

முன்னாள் காதலி

சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் காதலி என ஒரு பெண் நீச்சல் உடையில் பீச்சில் குளிக்கும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை ஷேர் செய்து அடுத்த ரகளையை ஆரம்பித்து இருக்கிறார்.

சத்யா

சத்யா

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்கள் எல்லாமே அந்த முதல் காதலியின் நினைவாகவே எடுத்ததாகவும் பல நாள் ரகசியங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. அந்த பெண்ணின் பெயரும் சத்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்

டாக்டர்

அமெரிக்காவில் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இப்போது சத்யா இருக்கிறார் என்றும் மியாமி கடற்கரையில் அவர் எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படங்களை எனக்கு அனுப்ப அதனை நான் உங்களிடம் ஷேர் செய்து என்னுடையை பிளாஷ்பேக் லவ் ஸ்டோரியை பகிர்ந்து கொள்கிறேன் என ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பினார் ராம் கோபால் வர்மா.

பையன் பொறியியல்

பையன் பொறியியல்

விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்த போது அதே கல்லூரியில் படித்த சத்யா உடன் எனக்கு ஒரு தலை காதல் ஏற்பட்டது என சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்வீட் போட, ஏகப்பட்ட நெட்டிசன்கள் பொறியியல் கல்லூரியில் மருத்துவ மாணவி எப்படி சார்? புளுகுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா என கிண்டலடித்து மீம்களை போட்டு ராம் கோபால் வர்மாவை விளாசித் தள்ளினர்.

ரஜினியா இருப்பாரோ

ரஜினியா இருப்பாரோ

அவங்க நிச்சயமா ரஜினியா தான் இருப்பாங்க.. அப்போதான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து பின்னர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்க்க முடியும் என ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு ராம் கோபால் வர்மாவை வச்சு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

அடடே விளக்கம்

அடடே விளக்கம்

ரசிகர்கள் இப்படி நோண்டி நொங்கெடுப்பாங்க என அறியாமல் ட்வீட் போட்ட ராம் கோபால் வர்மா அதற்கும் ஒரு அடடே விளக்கத்தை அடுத்த ட்வீட்டில் பதிவிட்டார். ஆனால், ஏனோ சில காரணங்களுக்காக அதை டெலிட் செய்து விட்டார். சில கட்டிட வேலைகள் நடந்ததால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் வளாகத்திற்குள் படித்ததாக கூறியுள்ளார். அதனை சிலர் நம்பியும் நம்பாமலும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பி கிரேட்

பி கிரேட்

பாலிவுட்டில் ரங்கீலா, சத்யா என தரமான படங்களை எடுத்து முன்னணி இயக்குநராக இருந்த ராம் கோபால் வர்மா ஏன் தற்போது ஆபாசமான பி கிரேட் படங்களை இயக்கி ஒடிடியில் வெளியிட்டு காசு பார்த்து வருகிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி முன்பை போலவே நல்ல படங்களை எடுங்க என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

மியா மல்கோவாவை வைத்து கிளைமேக்ஸ் படத்தை இயக்கி ஆபாச இயக்குநர் என்கிற பட்டத்தை பெற்ற ராம் கோபால் வர்மா, தொடர்ந்து நேக்கட், டேஞ்சரஸ் என கசமுசா படங்களை எடுத்து தன்னுடைய சொந்த ஒடிடியிலே வெளியிட்டு சம்பாதித்து வருகிறார்.

டெலிட் பண்ணுங்க

டெலிட் பண்ணுங்க

உங்களுடைய முன்னாள் காதலியாகவே அவர் இருந்துட்டு போகட்டும், உங்களை நம்பி தனியாக மெசேஜில் போட்டோக்களை ஷேர் செய்தால் இப்படியா பொது வெளியில் அவரது பிகினி படங்களை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்துவீர்கள் இது ரொம்ப தப்பு சார், முதலில் அதை டெலிட் பண்ணுங்க என்றும் நெட்டிசன்கள் ராம் கோபால் வர்மாவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X