குறுக்கால பேசுனா தான.. ஆரியை குழப்பி கெட்டவனா காட்ட முடியும்.. ரம்யாவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ஆரி பேசும் போது குறுக்கிட்டு ரம்யா பேசியதை பார்த்த நெட்டிசன்கள், ரம்யாவை வழக்கம்போல பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

நிகழ்ச்சி கடைசி நேரத்தை நெருங்க நெருங்க பிக் பாஸ் வீடு அனல் பறக்கிறது.

எங்கே எல்லாம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ, அதில் எல்லாம் பேசிவிட வேண்டும் என ரம்யா ஓப்பன் ஆனது தான் தற்போது அவருக்கே எதிராக முடிந்து வருகிறது.

பக்குவம் இல்லை

பக்குவம் இல்லை

"அந்த பக்குவம் அவங்ககிட்ட இருந்தா ஏன் மக்கள்ட்ட திட்டுவாங்க போறாங்க! நேத்து மட்டுமல்ல எத்தனை முறை நீங்க குறை அடுக்கும்போது பொறுமையா கேட்டிருக்காரு!" என ஆரிக்கு ஆதரவாகவும், குறுக்கால வாய் விட்ட ரம்யாவுக்கு எதிராகவும் இந்த பிக் பாஸ் ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

பல்பு மன்னன்

பல்பு மன்னன்

"பல்பு மன்னன் பாலா தரையில் உருண்டு பந்து போடும் டாஸ்க்கில் கேபியிடம் பல்பு வாங்கி தான் உலக பல்பு மன்னன் என்பதை நிரூபித்தார்!" என நேற்றைய போட்டியில் பாலாஜி முருகதாஸ், கேபியிடம் தோற்றதை கிண்டலடித்து வருகிறார் இந்த நெட்டிசன். கேமில் மட்டுமில்லை, எல்லாவற்றிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகர் தான்.

அதுக்கும் மேல

அதுக்கும் மேல

ஆரி தான் இந்த வீட்டில் 90 நாட்களாக பேக்கேஜ் வச்சி சுத்திட்டு இருக்காரு, என கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆரியை பற்றி அடித்து விட்டுக் கொண்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் ஒரு முறை மட்டும் சொல்லாமல், தொடர்ந்து அடுக்கி வருவதால், ஆரிக்கும் மேல ரம்யா தான் பேக்கேஜ் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

இருந்தாலும், பிக்பாஸ் டிக்கெட் டு ஃபினாலேவுக்கு இப்படி ரொம்ப ரொம்ப கஷ்டமான டாஸ்க்க தந்துருக்காருப்பா.. என பேசியே போட்டியாளர்களை ரம்பம் போட வைத்து சண்டையை மூட்டப் பார்க்கும் பிக் பாஸ் மூக்கையும் சேர்த்து உடைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

குறுக்கால பேசுனாதான் குழப்பலாம்

குறுக்கால பேசுனாதான் குழப்பலாம்

"ஆரி அண்ணா : நான் பேசும் போது மட்டும் ஏன் குறுக்கால பேசுறீங்க.. ரியோ : குறுக்கால பேசுனா தான ஒன்ன குழப்பி கெட்டவனா காட்ட முடியும் னு சொல்லு" என ரம்யாவை தூண்டி விடுவது போன்ற இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் ஒரு வாரத்துல எல்லாரும் கடையை காலி பண்ண வேண்டியது தான்.

மொக்கை பவர்

மொக்கை பவர்

பாலாவுக்கு சூப்பர் பவர் இருக்கு, அதை வைத்து யாரையாவது சேவ் பண்ணிடுவார்னு பார்த்த ரசிகர்களுக்கும் சேர்த்து பல்பு கொடுக்கிற மாதிரி, நேற்றைய எபிசோடில், மொக்கை பவரை கொடுத்து உங்களுடன் மோத ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம் என சொல்லி விட்டார். பாலாவும் கேபியை அழைத்து அசிங்கப்பட்டது வேறு கதை.

மாஸ்டரும் வந்துட்டாரு

"இன்னொருவாட்டி ஆரி மேல கை பட்டது" என பிக் பாஸ் மீம் கமெண்ட்டுகளில் மாஸ்டர் புரமோ காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டு வந்துவிட்டனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் வாத்தியாராகத் தான் ஆரி செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், இது ஆப்ட்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X