தளபதி 66 ஹீரோயினை மாத்துங்க.. மீம்களை போட்டு ராஷ்மிகா மந்தனாவை பங்கமாக்கும் நெட்டிசன்கள்!

சென்னை: தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தி வரும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் மிஷன் மஜ்னு எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 66 படத்திலும் அவர் தான் ஹீரோயின் என ஹாட் தகவல்கள் வெளியான நிலையில் தான் இப்படி அவரை பற்றிய மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

பெங்களூரு பொண்ணு

பெங்களூரு பொண்ணு

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பெங்களூர் பொண்ணான இவர் டோலிவுட்டில் டாப் நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் தென்னிந்திய நடிகைகள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 25 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா.

ஸ்ரீவள்ளி

ஸ்ரீவள்ளி

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி எனும் கதாபாத்திரத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. சேலை முந்தானையை அவிழ்த்துக் காட்டி இவர் நடனமாடிய என் சாமி பாடல் வேற லெவலில் ஹிட்டானது. அந்த பாடலில் இறுதியில் வெறும் பாவாடையுடன் ஆற்றில் குளிப்பது போலவும் நடனமாடி கவர்ச்சி காட்டி இருந்தார்.

சீனை தூக்கிட்டாங்க

சீனை தூக்கிட்டாங்க

காருக்குள் நைட்டி அணிந்து நுழையும் ராஷ்மிகா மந்தனாவின் மார்பு பகுதியில் அல்லு அர்ஜுன் கை வைக்கும் காட்சி படு ஆபாசமாக இருப்பதாகவும் குடும்ப ரசிகர்கள் அந்த காட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படத்தில் இருந்து அந்த காட்சியை ரிலீசுக்கு பிறகு புஷ்பா படக்குழுவினர் நீக்கினர். புஷ்பா 2ம் பாகத்தில் இன்னும் எந்த எல்லைக்கு சென்று ராஷ்மிகா நடித்திருக்கிறார் என்பதை காணவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தளபதி 66 ஜோடி

தளபதி 66 ஜோடி

தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏகப்பட்ட பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தான் நடிக்கப் போகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்த நிலையில், விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

பறக்கும் மீம்ஸ்

பறக்கும் மீம்ஸ்

சுல்தான் படத்திலேயே நடிகை ராஷ்மிகா மந்தனாவை கோலிவுட் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. புஷ்பா படத்தில் ஓவர் கவர்ச்சியில் அவர் நடித்திருந்தாலும், ஒரே ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடிய சமந்தா ஒட்டுமொத்த கிரேஸையும் அள்ளிக் கொண்டார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக போட வேண்டாம் என விஜய் ரசிகர்களே ட்ரோல் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

போட்டு தள்ளிடுங்க

போட்டு தள்ளிடுங்க

"இங்க பாரு தவசி..

வம்சி..

அதான்.. அதான்..

என்ன பண்ணுவியோ தெரியாது.. படம் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல அவள போட்டு தள்ளிட்டு படத்தை கொண்டு போற" என கில்லி மீமை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

நல்லாவே இல்லையே

நல்லாவே இல்லையே

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா வேண்டவே வேண்டாம் என்றும், எப்படி யோசித்து பார்த்தாலும் நல்லாவே இல்லையே என்றும் விஜய் பட மீம்களை வைத்தே தளபதி 66 படத்தில் நடிக்கப் போவதாக எதிர்பார்க்கப்படும் ராஷ்மிகா மந்தனாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X