நீ தான் என் புருஷா..ஐ லவ் யூ பொண்டாட்டி.மாறி மாறி காதல் மழை பொழியும்.. ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி!

சென்னை : புதுமண தம்பதிகளான ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி இணையத்தில் மாறி மாறி காதல் மழை பொழிந்து வருகின்றனர்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சுட்டக்கதை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார்.

வீஜேவாக பணியாற்றிய சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகியாக நடித்து வரும் மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் 1ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம்

ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம்

சோஷியல் மீடியாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் பற்றிய செய்திதான். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றதால், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இந்த ஜோடிக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

இந்த புது ஜோடிக்கு இணையவாசிகள் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், ஒரு சில நெட்டிசன்ஸ், மகாலட்சுமி உடல் அமைப்பையும், ரவீந்தர் உடல் தோற்றத்தையும் வைத்து கிண்டலடித்து வருகின்றனர். அவரை ஏன் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்றும் பார்க்க ஜோடியே நன்றாக இல்லையே என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.

என் புருஷா

என் புருஷா

ஆனால்,அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த இளம் ஜோடி மகாபலிபுரத்தில் உள்ள இண்டர்காண்டினென்டல் ரிசாட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். திருமணத்திற்கு பின்பு முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராமில், நயன்தாரா ஸ்டைலில் மஞ்சள் தாலி தெரியும்படி போட்டோவை போட்டு, வாழ்க்கை அழகானது அதை நீ செய்து விட்டாய் என் புருஷா என்று பதிவிட்டுள்ளார்.

ஐ லவ் யூ பொண்டாட்டி

ஐ லவ் யூ பொண்டாட்டி

அதே போல ரவீந்தர் தனது திருமண போட்டோவை ஷேர் செய்து, வாழ்க்கைக்கு காதல் தேவை. காதலுக்கு மகாலட்சுமி தேவை. ஐ லவ் யூ பொண்டாட்டி என பகிர்ந்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் மழை பொழிந்து வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இதெல்லாம் உங்களுக்கே ஒவரா தெரியல என்று கிண்டலடித்து வருகின்றனர்

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

நடிகை மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரித்தார். தற்போது மகாலட்சுமி விடியும் வரை காத்திரு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் தயாரிக்கிறார். ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X