தேவசேனாவாக நடிக்கணும்.. அப்போ பாட்டியாத்தான் நடிக்கணும்.. சிங்கப்பெண்ணை பங்கம் பண்ண நெட்டிசன்ஸ்!
சென்னை: இளவரசி போல அலங்காரம் செய்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட சிங்கப்பெண் ரெபா மோனிகா ஜானை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
பாகுபலி 3ம் பாகத்தில் தேவசேனாவாக நடிக்கணும் என அவர் போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அனுஷ்கா ரசிகர்களோ, அனுஷ்காவை தவிர வேறு யாரும் தேவசேனா அல்ல என்று சண்டைக்கே வந்துவிட்டனர்.

தமிழில்
பிறந்து வளர்ந்தது பெங்களூரில் என்றால் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளத்தில் தான். 2016ல் வெளியான ஜாகோபின்டே சொர்க்க ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமானார் ரெபா. தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்த இவர், 2018ல் ஜெய்யுக்கு ஜோடியாக தமிழில் ஜருகண்டி படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார்.

சிங்கப்பெண்ணே
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா, விவேக், யோகி பாபு நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில், ஆசிட் அடிக்கப்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனையாக ரெபா மோனிகா ஜான் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிங்கப்பெண்ணே பாடலுக்கு முன்பும் இவரது காட்சிகள் தான் இடம்பெற்றிருக்கும்.

தேவசேனாவாக
இந்நிலையில், தற்போது ஆடை அலங்காரம் எல்லாம் செய்து கொண்டு, இளவரசி போல இருக்கும் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரெபா மோனிகா ஜான், "நான் பாகுபலி 3ம் பாகத்தில் தேவசேனாவாக நடிக்கட்டுமா?" என சும்மா ஒரு பேச்சுக்கு கேப்ஷன் கொடுத்து உள்ளார்.

பாட்டியாத்தான்
உடனே கிளம்பி வந்த நெட்டிசன்கள், அப்போ நீங்க பாட்டியாத்தான் நடிக்கணும் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பாகுபலி 2ம் பாகத்திலேயே தேவசேனாவுக்கு வயசாகிடுச்சு என்று லாஜிக்கலாகவே கலாய்த்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை உண்டாக்கி உள்ளது.

சண்டைக்கு வந்த ரசிகர்கள்
தேவசேனா என்றால் அது எங்க தலைவி அனுஷ்கா மட்டும் தான். மத்த யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு கனவில் கூட ஆசைப்படக் கூடாது என ஆந்திராவில் இருந்து அனுஷ்கா ரசிகர்கள் சண்டைக்கே வந்துவிட்டனர். மற்ற சிலர், பாகுபலி 3க்கு வாய்ப்பே இல்லை என்றும், வந்தால் நீங்களே தாராளமா நடிங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.

கல்யாண் விளம்பரம்
கல்யான் ஜுவல்லர்ஸின் புதிய விளம்பரத்திற்காக இந்த பிரைடல் லுக்கில் நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த விளம்பரத்தையும் ஷேர் செய்துள்ளார். அந்த பொன்னகையை விட உங்கள் புன்னகை அழகு என ரெபா மோனிகாவின் ரசிகர்கள் அவரது அழகை ரசித்து புகழ்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்து
நடிகை ரெபா மோனிகா ஜான் நடிப்பில் மழையில் நனைகிறேன் மற்றும் எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. பெங்களூருவை சேர்ந்த ரெபா மோனிகா ஜான் கன்னடத்தில் அறிமுகமாகவுள்ள சகலகலா வல்லபா படமும் போஸ்ட் புரொடக்ஷனில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே இவரது படங்களும் ஒடிடியில் வெளியானாலும் ஆகலாம்.


Click it and Unblock the Notifications











