ஏன் இதையெல்லாம் வீட்டுல பண்ண மாட்டீங்களோ.. நடிகை ரெஜினாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஆற்றுக்கு நடுவே குட்டிப் படகில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா வொர்க்கவுட் செய்யும் வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

எம்புட்டு இருக்குது ஆசை

எம்புட்டு இருக்குது ஆசை

விளம்பர மாடலாக 16 வயதிலேயே கலைத்துறையில் அடியெடுத்து வைத்த ரெஜினா கசாண்ட்ரா கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கொடிகட்டி பறக்கிறார். திரைப்படங்களில் படு கவர்ச்சியாக இவர் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். சரவணன் இருக்க பயமேன் படத்தில் வரும் எம்புட்டு இருக்குது ஆசை பாடலை பலரும் ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.

சென்னையிலேயே போட்டிங்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏரியில் ஒரு ஆள் மட்டுமே பயணிக்கக் கூடிய குட்டி படகை வைத்துக் கொண்டு துணிச்சலாக படகோட்டி செல்லும் வீடியோவை சமீபத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருந்தார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. நீரில் சாகசம் செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக மாறி உள்ளது.

ஓடத்திலேயே ஒர்க்கவுட்

அந்த சின்ன போட்டியிலேயே ரெஜினா கசாண்ட்ரா தற்போது ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது பைசப்ஸை பெரிதாக்கப் போவதாக கேப்ஷன் போட்டு, ஆற்றில் அந்த படகை இன்னொரு படகின் உதவியோடு நிறுத்தி வைத்துக் கொண்டு, ரெஜினா செய்யும் வெறித்தனமான வொர்க்கவுட்டை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.

ரைசா போட்ட லைக்

ரைசா போட்ட லைக்

ரெஜினா கசாண்ட்ராவின் இந்த அட்டகாசமான வொர்க்கவுட் வீடியோவை பார்த்த பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரைசா வில்சன் வாவ் என கமெண்ட் செய்து லைக்கும் போட்டுள்ளார். ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் ரெஜினாவின் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

வீட்டுல பண்ணமாட்டீங்களோ

வீட்டுல பண்ணமாட்டீங்களோ

சில நெட்டிசன்கள் இந்த வொர்க்கவுட் வீடியோவை பார்த்து விட்டு ரெஜினாவை பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். ஏன் இந்த வொர்க்கவுட்டை வீட்டுலயோ ஜிம்மிலயோ பண்ண மாட்டீங்களோ, ஆத்துல தான் அதுவும் குட்டி போட்டுல தான் பண்ணுவீங்களோ, நல்லா வித்தை காட்டுறீங்க என கலாய்த்து வருகின்றனர்.

கைவசம் இத்தனை படங்கள்

கைவசம் இத்தனை படங்கள்

நடிகை ரெஜினா கசாண்ட்ராவிற்கு தமிழில் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. விஷாலின் சக்ரா, அருண் விஜய்யின் 31வது படம், சூர்ப்பனகை, கசடதபற என ஏகப்பட்ட படங்கள் அவரது நடிப்பில் உருவாகியும் ரிலீசுக்கு தயாராகவும் உள்ளன. மற்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் ரெஜினா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X