இதுவும் வெறி தான்.. தொடர்ந்து ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.. பதிவை டெலிட் செய்த சாரா அலி கான்!

மும்பை: பாலிவுட் இளம் நடிகை சாரா அலி கான் பதிவிட்ட 'All Lives Matter' பதிவை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்த நிலையில், தனது போஸ்ட்டை சாரா அலி கான் டெலிட் செய்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் 2018ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான லவ் ஆஜ் கல் திரைப்படம் லாக்டவுன் காரணமாக வசூல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது.

காசி விஸ்வநாதர் கோயில்

காசி விஸ்வநாதர் கோயில்

நடிகை சாரா அலி கான் சமீபத்தில் தனது தாயுடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று பூஜை நடத்திய போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இஸ்லாமியரான நீங்கள் ஏன் புனிதமான இந்து கோயிலுக்கு செல்கிறீர்கள் என திட்டித் தீர்த்தனர்.

தம்பியுடன் பிகினியில்

தம்பியுடன் பிகினியில்

சாரா அலி கானின் தம்பி இப்ராஹிமின் பிறந்தநாளை முன்னிட்டு, பிகினியில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நடிகை சாரா அலி கான் வாழ்த்து தெரிவித்து இருந்தார். தம்பியுடன் இப்படியா ஆபாசமாக போஸ் கொடுப்பீங்க என்றும், இப்ராஹிமின் கையை குறிப்பிட்டு, அவர் எந்தளவுக்கு அசெளகரியமாக ஃபீல் பண்ணி இருக்கிறார் என்றும் சாரா அலி கானை ட்ரோல் செய்தனர்.

மீண்டும் சிக்கிய சாரா அலிகான்

மீண்டும் சிக்கிய சாரா அலிகான்

இந்நிலையில், நேற்று முன் தினம் கேரளாவில் யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பல பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். நடிகை சாரா அலி கான், தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக "All Lives Matter" என பல வண்ண கைகளுடன் யானையின் தும்பிக்கையையும் போட்டிருந்தார்.

புத்தியை காட்டாதீங்க

புத்தியை காட்டாதீங்க

அமெரிக்காவில் கடந்த மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு எனும் கருப்பினத்தவரை வெள்ளை போலீஸ் அதிகாரி துடிக்க துடிக்க கொன்ற சம்பவத்தை திசை திருப்பவே சாரா அலி கான் "Black Lives Matter"க்கு பதிலாக "All Lives Matter" என பதிவிட்டு பூதாகரமாக உருவெடுத்துள்ள விஷயத்தை நீர்த்துப் போக செய்ய தனது புத்தியை காட்டியுள்ளார் என நெட்டிசன்கள் அவர் மீது கமெண்ட்ஸ் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

டெலிட்

டெலிட்

தொடர்ந்து கடுமையான ட்ரோல்களும், மீம்களும் பறந்த நிலையில், நடிகை சாரா அலி கான், தான் பதிவிட்ட அந்த ட்வீட்டை டெலிட் செய்து விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடிவிட்டார். சமூக வலைதளத்தில் பிரபலமான ஹீரோயின்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. எல்லா உயிர்களும் முக்கியம் என கூறிய அவரை திட்டித் தீர்த்து ட்ரோல் செய்வதும், ஜார்ஜ் பிளாய்டை கொல்வது போன்ற வெறித்தனம் தான்.

Recommended Video

கர்ப்பிணி யானையோட வலி | Namitha Tears • Emotional Video
தனுஷுக்கு ஜோடி

தனுஷுக்கு ஜோடி

சாரா அலி கானின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் அடுத்த படியாக நடிகர் தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்க உள்ளார். சாரா அலி கான் நடிப்பில் இந்த ஆண்டு கூலி நம்பர் ஒன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X