பொண்ண அப்படி திட்டிட்டு.. இப்போ அம்மா எப்படி போஸ் கொடுக்கிறாங்க பாருங்க.. ஷிவானி பர்த்டே பார்ட்டி!

சென்னை: ஷிவானி நாராயணன் பிறந்தநாளில் பாலாஜி முருகதாஸ் மட்டுமே கலந்து கொண்டுள்ளார் போல தெரிகிறது.

Recommended Video

Shivani-க்கு Cake ஊட்டிய Bala |Shivani Birthday Celebration With Bala | Bigg Boss | Filmibeat Tamil

ஷிவானிக்கு கேக் ஊட்டி விட்ட போட்டோ நேற்று வெளியாகி வைரலான நிலையில், ஷிவானி அம்மாவின் தோள் மீது பாலா கைப் போட்டு எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாலாவுக்கு ஆயா வேலை செய்ய வந்தியா என ஷிவானி அம்மா திட்டியதை எல்லாம் மறந்துட்டாங்களா இல்லை எல்லாம் சும்மா நடிப்பா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஷிவானி பர்த்டே

ஷிவானி பர்த்டே

சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளருமான ஷிவானி நாராயணனின் 20வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஷிவானி பிறந்தநாள் விழாவில் ஒட்டுமொத்த பிக் பாஸ் பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், பாலாஜி முருகதாஸ் மட்டுமே கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஷிவானிக்கு ஊட்டிவிட்ட பாலா

ஷிவானிக்கு ஊட்டிவிட்ட பாலா

ஷிவானி நாராயணனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் அவருக்கு அழகாக கேக் ஊட்டி விடும் புகைப்படம் வெளியாகி வைரலானது. ஷிவானி நாராயணன் பிறந்தநாள் அதுவுமா போட்டிருந்த மேக்கப் பேய் மேக்கப் போல இருப்பதாக சில நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

ஷிவானி அம்மாவுடன்

ஷிவானி அம்மாவுடன்

ஷிவானி நாராயணனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி அம்மா அகிலாவின் தோள் மீது கை போட்டபடி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பார்க்கவே ரொம்ப ஹேப்பியாக இருக்கு என பாலாவையும் ஷிவானியையும் வாழ்த்தி வருகின்றனர்.

எல்லாமே

எல்லாமே

பிக் பாஸ் நிகழ்ச்சியே ஒரு ஸ்க்ரிப்டட் ஷோ என்றும் எல்லாமே செட்டப் தான் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது ஷிவானி அம்மா பாலாவுடன் ஹேப்பியாக இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் பாலாவுடன் ஷிவானி சுத்துறதை தப்பா பேசி திட்டினீங்க இப்போ இப்படி போஸ் கொடுக்கிறீங்களே.. எல்லாமே நடிப்பா கோபால் என கலாய்த்து வருகின்றனர்.

முட்டாள் ஆக்கிட்டாங்க

முட்டாள் ஆக்கிட்டாங்க

ஷிவானி பிறந்தநாள் விழாவில் பாலா கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கடைசியில.. நம்ம எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டாங்க.. மீடியா ரொம்ப டேஞ்சர்ப்பா என முதல்வன் பட போட்டோவை போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.

பிக் பாஸ் பிரபலங்கள் வாழ்த்து

பிக் பாஸ் பிரபலங்கள் வாழ்த்து

ஷிவானி நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு சனம் ஷெட்டி, ஆரி, அர்ச்சனா மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் ஷிவானி நாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், ஷிவானியின் ரசிகர்கள் அவருக்கு காமன் டிபியை எல்லாம் வெளியிட்டு வாழ்த்தினர்.

 நன்றி

நன்றி

நேற்று முழுவதும் பர்த்டே பார்ட்டியில் பிசியாக இருந்த நடிகை ஷிவானி நாராயணன், தன்னை வாழ்த்திய பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போது புதிய கவர்ச்சியான போட்டோ ஒன்றை பதிவிட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

ரம்யா பாண்டியன் வாழ்த்து

ரம்யா பாண்டியன் வாழ்த்து

ஷிவானி நாராயணனின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்த சக போட்டியாளரும் நடிகையுமான ரம்யா பாண்டியன், அழகியே என கமெண்ட் போட்டு ஷிவானியை வாழ்த்தி உள்ளார். 2.68 லட்சம் ரசிகர்கள் ஷிவானியின் இந்த லேட்டஸ்ட் போட்டோவிற்கு லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X