வடிவேலு மண்டை மேல இருக்குற கொண்டை மாறி ஆகிடுச்சு அந்த குண்டு பல்பு.. ஷிவானியை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: மீண்டும் அந்த குண்டு பல்புகளுக்கு நடுவே நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் ஷிவானி நாராயணன்.
15 வயதிலேயே சின்னத்திரை நடிகையாக கலக்கிய ஷிவானி நாராயணன் சமீபத்தில் தான் தனது 20வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கிராண்ட் ஃபினாலேவுக்கு முந்தைய வாரம் தான் வீட்டை விட்டு வெளியேறினார்.

முன்ன மாதிரி இல்லை
5 மணி பஸ் என்றே ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பெயர் வைத்து இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக கடந்த ஆண்டு லாக்டவுனில் தினமும் 5 மணிக்கு டான்னு ஆஜர் ஆகிவிடுவார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போலாம் இஷ்டத்துக்கு எப்போ தோணுதோ அப்போ போட்டோவை வெளியிட்டு வருகிறார்.

பாலாஜியுடன் கேக் கட்டிங்
20வது பிறந்தநாளை பிக் பாஸ் பிரபலஙக்ள் உடன் கொண்டாடுவார் ஷிவானி என பார்த்தால் தன்னுடைய செல்ல மாமா பாலாஜி முருகதாஸ் உடன் மட்டுமே கொண்டாடினார். பாலாஜியையும் ஷிவானியையும் அந்த கழுவு கழுவி ஊற்றிய ஷிவானியின் அம்மாவும் பாலாவுடன் கூலாக செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மாலத்தீவு டூர்
பாலாஜி முருகதாஸ் இதுவரை கோவாவுக்கு டூர் போனது போல எந்தவொரு போட்டோவையும் வெளியிடவில்லை. ஆனால், சத்தமே இன்றி தனது அம்மாவுடன் மாலத்தீவுக்கே சுற்றுலா சென்றுவிட்டு வந்து விட்டார் ஷிவானி நாராயணன். மேலும், ஏகப்பட்ட பிகினி போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு திணறடித்துள்ளார்.

குண்டு பல்பு அருகே
குண்டு பல்பை நிரந்தரமாக தனது வீட்டிலேயே வாங்கி மாட்டி வைத்திருக்கிறார் ஷிவானி என்றே தோன்றுகிறது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கு குண்டு பல்புகளுக்கு அருகே சேலையில் செழிப்பாக போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்ட நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட குண்டு பல்பு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

பார்த்து சுடப் போகுது
ஷிவானியும் செம ஹாட்டாக இருக்கிறார். குண்டு பல்புக்களும் செம சூடாக இருக்கிறதே என்றும், பார்த்து கொஞ்சம் தள்ளி நில்லுங்க ஷிவானி குண்டு பல்புக்கு சூடு பட்டுடப் போகுது என கிண்டலாகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

ஃபேவரைட் ஸ்பாட்
வித விதமான உடைகள் மாறினாலும் அந்த குண்டு பல்பு மாறவே மாட்டேங்குதே என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அந்த இடத்தை தனது ஃபேவரைட் ஸ்பாட்டாக ஷிவானி நாராயணன் மாற்றி உள்ளார். உங்க அழகுக்கு அந்த இரண்டு குண்டு பல்பும் மேலும் அழகு கூட்டுது என்றும் வழிந்து வருகின்றனர்.

யப்பா முடியல
இந்நிலையில், தற்போது கிராப் டாப் அணிந்து கொண்டு தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இருக்கும் ஷிவானி மீண்டும் அதே குண்டு பல்புகளுடன் போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் கெட்டப்பு மாறினாலும் மண்டை மேல இருக்குற அந்த கொண்டை மாற மாட்டேங்குதே என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











