சும்மா இறங்கி குத்திய ஷிவானி நாராயணன்.. எல்லாம் அதுக்குத்தானா? என கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சக போட்டியாளரான ரம்யா பாண்டியன் ஷிவானி நாராயணனின் இந்த நடன வீடியோவை பார்த்து வாய் பிளந்து வாவ் என பாராட்டி உள்ளார்.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக இப்பவே நடன பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா என நெட்டிசன்களும் ஜாலியாக கலாய்த்து கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பிக்பாஸுக்கு பிறகு

பிக்பாஸுக்கு பிறகு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி நாராயணன் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வி ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. லாஸ்லியாவை போல இவருக்கும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரம்யா பாண்டியனுக்கு மட்டுமே பட வாய்ப்பு வந்துள்ளது.

மீண்டும் விஜய் டிவியில்

மீண்டும் விஜய் டிவியில்

பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் ஷிவானி நாராயணன் நடிக்கப் போவதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், அது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜோடி மாறிப் போச்சு

ஜோடி மாறிப் போச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸும் ஷிவானி நாராயணனும் ரொமான்ஸ் செய்து வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில், பாலாஜி முருகதாஸ் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சோமசேகர் அந்த நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணனுக்கு ஜோடியாக களமிறங்கிய புரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

செம குத்து வீடியோ

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம குத்தாட்டம் போடும் வீடியோவை ஷிவானி நாராயணன் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கேப்ஷனும் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.

வாவ் சொன்ன ரம்யா

வாவ் சொன்ன ரம்யா

ஷிவானி நாராயணன் வெளியிடும் போட்டோக்களுக்கும், வீடியோக்களுக்கும் சக பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், ஷிவானி நாராயணன் பதிவிட்டுள்ள இந்த நடன வீடியோவை பார்த்த நடிகை ரம்யா பாண்டியன் முதல் ஆளாக வாவ் என அசத்தல் கமெண்ட் போட்டு ஷிவானியை பாராட்டி உள்ளார்.

நெட்டிசன்கள் கிண்டல்

நெட்டிசன்கள் கிண்டல்

நடனம் என்றால் ஷிவானி நாராயணனுக்கு ரொம்பவே உயிர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், ஷிவானி நாராயணன் செம குத்தாட்டம் போட்டுள்ள இந்த நடன வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இப்பவே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக தயாராகுறீங்களா? என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X