வாழ்க்கையே இப்போதான் ஆரம்பிக்கிறது..நல்ல குடும்பத்தை நாசமாக்கிட்டியே? கெனிஷாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் தான் காரணம் என இணையத்தில் அவர் குறித்து பலர் பேசி வரும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், என் வாழ்க்கையே இப்போது தான் ஆரம்பித்து உள்ளது என்று பேசி உள்ளார். இதற்கு இணையவாசிகள் தங்கள் கண்டனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த சில மாதமாக இவர்கள் பிரிந்து விடுவார்கள் என பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென கடநத 9ந் தேதி, அதாவது ஜெயம் ரவியின் பிறந்த நாளுக்கு முதல் நாள் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துத் செய்ய இருப்பதாக அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். மேலும், பிறந்த நாள் அன்று கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.

jayam ravi aarti ravi keneesha

ஜெயம் ரவி பேட்டி: ஜெயம் ரவியின் இந்த முடிவு முழுக்க முழுக்க தன் கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவு என ஆர்த்தி கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த ஜெயம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். இதுகுறித்து அவரின் அப்பா என் பெற்றோரிடம் பேசினார் என்றார்.

பாடகியுடன் தொடர்பா: மேலும், பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட், மனஅழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு இணைந்து ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதற்காகத்தான் இப்படி பேசுகிறார்களா என தெரியவில்லை, இதுபற்றி அதிகம் பேச வேண்டாம் என நினைக்கிறேன். உண்மை ஒருநாள் வெளிவரும் என்று ஜெயம் ரவி பேசி இருந்தார்.

பாடகி கெனிஷா பிரான்சிஸ்: இதையடுத்து யார் அந்த பாடகி என இணையத்தில் பலர் தேடத் தொடங்கிய நிலையில், பாடகி கெனிஷா பிரான்ஸ் யூடியுப் தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் தமிழ் பெண்ணு தான் அப்பா தமிழ், அம்மா ஆப்ரிக்கன்ஸ். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கென்யாவில் தான். அதன் பிறகு பெங்களுரில் செட்டில் ஆகிவிட்டோம். என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே பாடகர் என்பதால், எனக்கு பாட்டுப்பாடும் திறமை இயல்பாகவே இருந்தது. பாட்டு பாடிக்கொண்டே நடனம் ஆடுவது நன்றாக இருக்கும் என்பதால், சால்சா, சம்பா நடனத்தை கற்றுக்கொண்டேன்.

jayam ravi aarti ravi keneesha

ஜெயம் ரவி ஆதரவாக இருந்தார்: நான் பாடிய, இதை யார் சொல்வாரோ என்ற ஆல்பம் வெளியீட்டு விழாவிற்கு ஜெயம் ரவி, ஜீவா வந்து இருந்தார்கள். என் பாடலை ஜெயம் ரவி தான் வெளியிட்டார். என் பாடல் முடிந்த பிறகு அனைவரும் அமைதியாக இருந்தனர். அதைப்பார்த்து எனக்கு ஷாக்காகி விட்டது. அதன்பின் ஜெயம்ரவி, பாடலை கேட்டு அனைவரும் மயக்கத்தில் இருக்கிறார் என்று பேசி, அந்த சைலண்டை பிரேக் செய்தார். அதன் பிறகு தான் அனைவரும் கை தட்டினார்கள். அதுவரைக்கும் ஜெயம் ரவிக்கு அந்த பாட்டை நான் தான் பாடினேன் என்று தெரியவில்லை. பின் தெரிந்து கொண்டு,உங்க வாய்ஸ் ரொம்ப நல்ல இருக்கிறது என்று சொன்னார். எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

இப்படித்தான் வாழ வேண்டுமா: தொடர்ந்து பேசிய அவர்,நான் வாழ்க்கையில் பல கஷ்டம், தோல்வி என பலவற்றைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். இனி மேல் தான் என் வாழ்க்கையே ஆரம்பிக்கப்போகிறது என்று பாடகி கெனிஷா அந்த பேட்டியில் பேசி இருந்தார். இதைப்பார்த்த இணையவாசிகள், அடுத்தவர்களின் வாழ்க்கை கெடுத்துத்தான் வாழ்க்கை வாழ வேண்டுமா என்றும், நல்ல குடும்பத்தை நாசமாக்கிட்டியே என்றும் அவரை திட்டி தீர்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X