Don't Miss!
- News
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டான் படத்தில் இருந்து சிவாங்கி போர்ஷனை அப்படியே தூக்கிடுங்க.. ஒரே க்ரிஞ்ச் தான்.. கதறும் ரசிகர்கள்!
சென்னை: குக் வித் கோமாளியை விட்டு வெளியேறி சிவாங்கி நடித்தால் கோவை சரளா ரேஞ்சுக்கு வரலாம் என நெட்டிசன்கள் டான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி உள்ள சிவாங்கிக்கு ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
சோஷியல் மீடியாவில் சிவாங்கிக்கு இருக்கும் ஆர்மி டான் படத்தை விட சிவாங்கி ஹாஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
ஆனால், படத்தை பார்த்து விட்டு வரும் ரசிகர்கள், அந்த போர்ஷனே வேண்டாம் என புலம்பித் தள்ளி உள்ளனர்.
சமுத்திரகனி
சாம்ராஜ்யம்..
வெல்வோம்னு
சொல்லியே
மனுஷன்
வாழ்கிறார்..
ஏகே61
படத்திலும்
முக்கிய
ரோலாம்

குக் வித் கோமாளி சிவாங்கி
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த சிவாங்கி சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டார். பின்னர், குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக அறிமுகமாகி சின்னத்திரை ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானார். அஸ்வின் குமார் மற்றும் சிவாங்கி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அவரை டிரெண்டாக்கியது.

டான் படத்தில் அறிமுகம்
ஆல்பம் பாடல்களை பாடி அசத்தி வந்த சிவாங்கி, நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். சிவாவின் காசேதான் கடவுளடா மற்றும் வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படங்களிலும் சிவாங்கி நடித்து வருகிறார். மலையாள பொண்ணாகவே டான் படத்தில் சிவாங்கி நடித்துள்ளார்.

ஹாஷ்டேக் டிரெண்டிங்
டான் படக்குழுவினர் மற்றும் அப்பா அம்மாவுடன் சிவாங்கி படம் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், சிவாங்கியின் ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிவாங்கி முதன் முதலில் சினிமாவில் நடித்ததையும் பலரும் வரவேற்று ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நல்ல அறிமுகம்
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட லீடு நடிகர்களுக்கு அடுத்தபடியாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சிவாங்கிக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. குறைவான நேரமே வந்தாலும், க்யூட்டாக நடித்துள்ளார் என கொஞ்சி வருகின்றனர்.

ராஜு பாய் உடன்
டான் படத்தில் பிக் பாஸ் 5வது சீசன் டைட்டில் வின்னர் ராஜு பாயும் ஒரு சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் ஆப்போஸிட் கேங் இவர். இந்நிலையில், ராஜு பாய் உடன் சிவாங்கி இருக்கும் டான் படத்தின் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

க்ரிஞ்ச் நடிப்பு
குக் வித் கோமாளியில் இருந்து சிவாங்கி இன்னும் வெளியே வரவில்லை என்றும் அவரது நடிப்பு படத்தில் ரொம்பவே க்ரிஞ்சாக உள்ளதாக படத்தை பார்த்து விட்டு வெளியேறிய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர். மேலும், சிவாங்கி இன்னும் நல்லா நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களின் அட்வைஸையும் கொடுத்துள்ளனர்.

அந்த போர்ஷனே வேண்டாம்
டான் படத்தில் சிவாங்கி போர்ஷனை தூக்கி விட்டால் இன்னமும் படம் நல்லா இருந்து இருக்கும். அவரை பார்க்கவே கடுப்பாக உள்ளது. திறமையான நடிகர்களுக்கு லில்லி கதாபாத்திரத்தை கொடுத்திருக்கலாம் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி உள்ளனர்.