ஓ எரிக்கப் போறீங்களா.. ஜோதில ஐக்கியமாகி ஜோதிகா மாதிரி.. பராசக்தி கிளைமேக்ஸை பங்கம் பண்ணிட்டாங்க!

சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கராவிடம் இருந்து இப்படியொரு வீக்கான படத்தையும் கிளைமேக்ஸையும் எதிர்பார்க்கவில்லை என பராசக்தி திரைப்படம் ஓடிடியில் பல மொழிகளில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்க இன்பன் உதயநிதி வெளியிட சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடித்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் பேசில் ஜோசப், ராணா டகுபதி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருந்தனர்.

Netizens trolled Sivakarthikeyan s Parasakthi after its OTT release

ஆனால், பராசக்தி திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான நிலையில், பாக்ஸ் ஆபிஸில் போதிய வெற்றியை பெறவில்லை. கடந்த மாதம் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டினாலும் இந்த படம் வெற்றிப் பெறவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், ஓடிடியில் படத்தை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் படம்: ஜீ5 தமிழில் ஏகப்பட்ட விளம்பரங்களுடன் பராசக்தி படத்தை பார்ப்பது ரொம்பவே கடுப்பை கிளப்பினாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் ஓடிடி ரசிகர்கள் இந்த படத்தை பொறுமையாக உட்கார்ந்துப் பார்த்து சிவகார்த்திகேயனுக்கு இது சூப்பர் படம் என பாராட்டி வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் நல்ல கதையை எடுத்துக் கொண்ட சுதா கொங்கரா பல இடங்களில் கோட்டை விட்டு விட்டார் என்றும் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி எல்லாம் கிரிஞ்சு மேக்ஸ் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜோதியில ஐக்கியமாகி ஜோதிகா போல: பராசக்தி படத்தின் ஆரம்பத்தில் ரவி மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நடக்கும் சண்டை அவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதே கிளைமேக்ஸில் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர். மம்மி வில்லன் மாதிரி தீயில் எரித்த பின்னரும் ரவி மோகன் எழுந்து வந்து சண்டை போடும் காட்சியை டாக்டர் படத்தில் கடைசியில எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா என்றும் "ஓ எரிக்கப் போறாங்களா அப்படியே ஜோதியில ஐக்கியமாகி ஜோதிகா போல தக்கச்சிம்மி தக்கச்சிம்மின்னு டான்ஸ் ஆடப்போறேன்" என்கிற டயலாக்கை பேக்கிரவுண்டில் போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X