இந்த பக்கம் ஷிவானி.. அந்த பக்கம் கேபி.. தோள் மேல கை போட்டு என்ஜாய் பண்ணும் சோம் பிரதர்!

சென்னை: ஷிவானி மற்றும் கேபியின் தோள் மீது சோமசேகரின் சகோதரர் கை போட்டிருக்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர் சோமசேகரின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், அர்ச்சனா, சுரேஷ் தாத்தா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், கேபி, சம்யுக்தா, வேல்முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

வேற லெவல் பர்த்டே

வேற லெவல் பர்த்டே

பிக் பாஸ் போட்டியாளர் சோமசேகரின் இந்த ஆண்டு பிறந்தநாள் வாழ்க்கையிலே அவருக்கு மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்துள்ளது. சக போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், அர்ச்சனா, சுரேஷ் தாத்தா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், கேபி, சம்யுக்தா, வேல்முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சோமை வாழ்த்தினர்.

புது சொந்தங்கள்

புது சொந்தங்கள்

அழகிய தமிழ் மகன் பட்டத்தை வென்ற பிறகு தனக்கு பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என புலம்பிக் கொண்டிருந்த சோமசேகருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும் சக போட்டியாளர்கள் பலரையும் சொந்தங்களாக மாற்றியும் உள்ளது.

இவங்களாம் மிஸ்சிங்

இவங்களாம் மிஸ்சிங்

ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பமும் ஒரே இடத்தில் இருந்தது போல கோலாகலமாக நடைபெற்ற சோமசேகரின் பிறந்தநாள் விழாவில் ரம்யா பாண்டியன், ஆரி அர்ஜுனன், நிஷா, ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

ஷிவானி கேபி நடுவில்

ஷிவானி கேபி நடுவில்

ஏகப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை சோமசேகர் ஷேர் செய்திருந்தாலும், இந்த ஒரு போட்டோவில் பர்த் டே பாய் சோமசேகர் தானா? அல்லது அவரது சகோதாரருக்கு பிறந்தநாளா என்றே தெரியாத அளவுக்கு இருக்கிறது. ஒரு பக்கம் ஷிவானி நாராயணன் மறுபக்கம் கேபி இருக்க நடுவில் நிற்கும் சோம் சகோதரர் இருவரது தோளிலும் கை போட்டு போஸ் கொடுத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் வாழ்வு தான் என கலாய்த்து வருகின்றனர்.

ஆரி ரசிகர்

ஆரி ரசிகர்

ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் சோமசேகரை பார்க்க வந்த அவரது சகோதரர் பகவான் ஆரி என டைட்டில் வின்னர் ஆரியை கொண்டாடினார். மேலும், கடைசியாக வெளியே போகும் போது அனைவரையும் ஒன்றாக சேர்த்து இங்கே எல்லாரும் நண்பர்கள் தான் பகைவர் யாருமில்லை என பிக் பாஸ் ரசிகர்களுக்காக சொன்ன விஷயம் வரவேற்பை பெற்றது.

சந்தோஷத்தில் சோம்

இத்தனை பேரின் அன்பும் தனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என உருகி இந்த போட்டோக்களை பிக் பாஸ் பிரபலமான சோமசேகர் ஷேர் செய்துள்ளார். பாலாஜியுடன் ஆட்டம் பாட்டம் என டிஜே பாடல்களை இருவரும் பாடிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. சீக்கிரமே நல்ல வாய்ப்புகள் சோமசேகருக்கு கிடைக்க வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X