கருப்பன் குசும்புக்காரன்.. ஜாக்கி ஜட்டி தான் போடுவாரு.. சிக்ஸ்பேக் காட்டிய சூரி.. குவியுது ட்ரோல்!

சென்னை: நடிகர் சூரி தனது சிக்ஸ் பேக் தோற்ற புகைப்படத்தை ஷேர் செய்து, ஜிம் மாஸ்டர் சரவணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த புகைப்படத்தில் ஜாக்கி ஜட்டி தெரியும் படி சூரி கொடுத்த போஸை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சீமராஜா படத்தின் ஒரு காட்சிக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்தது குறிப்பிடத்தக்கது.

சிக்ஸ் பேக் சூரி

சிக்ஸ் பேக் சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி நடிகர் சூரியை சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக மாற்றியது. சிவகார்த்திகேயன் உடன் இணைந்து இவர் பண்ணும் காமெடிகள் ரசிகர்களின் ஹாட் ஃபேவரைட். சீமராஜா படத்தின் ஒரு காமெடி காட்சிக்காக சூரி சிக்ஸ்பேக் வைத்து மிரட்டி இருந்தார்.

குருவுக்கு நன்றி

குருவுக்கு நன்றி

இந்நிலையில், தற்போது தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி." என்றும் குறிப்பிட்டுள்ளார். சூரியின் சிக்ஸ் பேக்கை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆனால், அந்த போட்டோவில் ஜாக்கி ஜட்டி தெரியும்படி நடிகர் சூரி செம மாஸாக போஸ் கொடுத்திருப்பதை பார்த்த சில நெட்டிசன்கள், நீங்களும் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா என்றும், "சூரி அவர்கள் ஜாக்கி ஜட்டி நிறுவனத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள போஸ்.. இனி பல கடைகளில் இந்த போட்டோவைப் பார்க்கலாம்.. எல்லாம் விளம்பரம்.." என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரஜினி முருகன் படத்திலேயே

ரஜினி முருகன் படத்திலேயே

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் இடம்பெற்ற ஜோசியக்காரர் காமெடியில், கால் ஜோசியம் பார்க்கும் சூரியை ஜோசியக்காரர் உள்ளாடை அணியவில்லை என ஓட்டியிருப்பார். அந்த காமெடி காட்சியை பதிவிட்டு, "என்ன பங்கு அப்பவே இதைதான் அந்த ஜோசியக்காரன் போட சொன்னான்" என சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

எதுக்கு இவ்ளோ லேட்

எதுக்கு இவ்ளோ லேட்

மேலும், சிலர் கருப்பன் குசும்புக்காரன் போட்டா ஜாக்கி ஜட்டித் தான் போடுவான் என்றும், இதை சீமராஜா படத்தின் ரிலீஸ் அப்பவே சொல்லி இருக்கலாமே எதுக்கு இவ்ளோ லேட் என்றும் நடிகர் சூரியை பலரும் வச்சி செய்து வருகின்றனர். ஆனால், சூரியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஏகப்பட்ட சூப்பரான கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

Recommended Video

போலீஸ் கிட்ட ஆட்டோகிராப் வாங்க வந்தேன் |ACTOR SOORI VISIT TRIPLICANE POLICE STATION |FILMIBEAT TAMIL
வெற்றிமாறன் இயக்கத்தில்

வெற்றிமாறன் இயக்கத்தில்

நடிகர் சந்தானம், யோகி பாபுவை தொடர்ந்து சூரியும் இப்போ ஹீரோ ஆகப் போகிறார். அதுவும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த சிக்ஸ்பேக் தோற்றம் சீமராஜா படத்துக்காக எடுத்ததா? இல்லை வெற்றிமாறன் படத்துக்காக மீண்டும் சிக்ஸ்பேக் வைத்துள்ளாரா சூரி? என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X