13 வருஷம்.. 108வது நாள்.. வீடியோ மீம்களை போட்டு ரெட்ரோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.. பாவம் சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாகவே இருந்திருக்கும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஜெனரல் ஆடியன்ஸை இந்த படம் கவர்ந்ததா? என்றால் இதுவரை கலவையான விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன. முதல் நாள் வசூல் கங்குவா அளவுக்கு பெரிதாக இல்லை என்றும் ஆனால், 20 கோடி வரை இந்தியாவிலேயே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கண்டிப்பாக இந்த படம் சூர்யாவுக்கு ஃபிளாப் படமாக அமையாது என்கின்றனர். படத்தின் பட்ஜெட் வெறும் 65 கோடி ரூபாய் மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதல் வாரத்திலேயே போட்ட காசை முடிந்த வரை சூர்யா எடுத்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Netizens trolled Suriya s Retro movie with Mark Antony scene and some memes

ஆனால், பிரதீப் ரங்கநாதனின் டிராகன், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படங்களின் வசூலை முறியடிக்குமா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், ரெட்ரோ படம் குறித்து ஏகப்பட்ட வீடியோ மீம்களை ரசிகர்கள் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

13 வருஷம்.. 108வது நாள்: நடிகர் சூர்யா கடைசியாக சிங்கம் 2 படத்தின் மூலம் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார் என்றும் அதன் பின்னர் வெளியான அவரது படங்கள் எல்லாமே சொதப்பி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 13 வருஷம்.. 108வது நாள் என போட்டு மார்க் ஆண்டனி படத்தில் இப்போ நான் கேங்ஸ்டர் என எந்திரிக்கும் எஸ்.ஜே. சூர்யா அதே கேரேஜ், அதே அழுக்கு டிரெஸ் என பார்த்து அப்செட் ஆகும் வீடியோவை ஷேர் செய்து மீண்டும் சூர்யா படம் சொதப்பி விட்டது என கலாய்த்து வருகின்றனர்.

பிரதீப் ஃபேன்ஸ் கொண்டாட்டம்: "ரெட்ரோ படத்தை பார்த்த ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்..

சூர்யா Fans னா சும்மாவா..

சூர்யா Fans ஆ பிரதீப் Fans மாமா.." என சூரியின் காமெடி டெம்பிளேட்டை போட்டு ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

ரெட்ரோ மீம்ஸ்: ரெட்ரோ டிரைலர் தரமாக இருந்தது. ஆனால், ரெட்ரோ படம் அமிதாப் மாமா போல இருந்தது என்றும் கலகலப்பு படத்தில் சூர்யா மாதிரி சிரிப்பேன் என விமல் சொல்லும் காட்சிகளை எல்லாம் ஷேர் செய்து கார்த்திக் சுப்புராஜ் இங்கே இருந்துதான் படத்தை சுட்டு இருக்கார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிளாக்பஸ்டர்: இந்த முறை நெகட்டிவ் ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்கள் எவ்வளவு மோசமாக வந்தாலும் அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை எப்படி ஹிட் ஆக்கினார்களோ அதே போல ஹிட்டாக்குவோம் என உறுதியாக சூர்யா ரசிகர்கள் முதல் நாளே இந்தியளவில் 20 கோடி வரை வசூல் செய்யும் அளவுக்கு செய்துள்ளனர். உலகளவில் படத்தின் வசூல் மேலும், அதிகளவில் இருக்கும் என்கின்றனர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என விடுமுறை நாட்களில் தொடர்ந்து படம் ஓடினாலே போதுமான வசூலை அள்ளி லாபத்ஹை நோக்கி நகர்ந்துவிடும் என்கின்றனர். கனிமா பாடலுக்கு ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடும் அளவுக்கு ஸ்ரேயாவின் பாடலுக்கும் வைப் செய்ய சந்தோஷ் நாராயணன் வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X