சோன முத்தா போச்சா.. கேம் ஆடாமல் இப்படி அழறீங்களே தாமரை.. பங்கமாக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: சுருதி ஈசியான போட்டியாளர் தாமரை என முடிவு கட்டி பக்காவாக காற்று காயினை திருடிய நிலையில், கதறி அழும் தாமரையை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தாமரை செல்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டே பிக் பாஸ் வீட்டில் மூன்று வாரங்களை கடந்து விட்டார்.
இன்னும் பல வாரங்கள் இந்த வீட்டில் இருக்கலாம் என கனவு கண்டவருக்கு காயின் பறிபோன காண்டில் துரோகம் செஞ்சிட்ட சுருதி என புலம்ப ஆரம்பிக்க ரசிகர்கள் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ரொம்ப கஷ்டம்
"#ThamaraiSelvi இது ஓரு கேம் உங்க காயினை பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு அத விட்டுட்டு இப்படி அழகுறது எல்லாம் ரொம்பவே கஷ்டம்" என தாமரை செல்வியை தாலித்துக் கொட்டி வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். சுருதி விளையாடியதற்கு சப்போர்ட் செய்தே பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சுருதிக்கு பயமா
பாவனி, நிரூப், இசைவாணி (இந்த வாரம் எடுக்க முடியாது) வருண் உள்ளிட்ட மற்ற டஃப் ஆன போட்டியாளர்களிடம் ஏன் சுருதி காயினை எடுக்கவில்லை. வீக்கான போட்டியாளராக கருதப்படும் தாமரையிடம் இருந்து ஏன் எடுத்தார் என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சோன முத்தா போச்சா
தனது காயினை பத்திரப்படுத்த முடியாமல் பறி கொடுத்து விட்டு அழுது புலம்பும் தாமரை செல்வியை பார்த்து சோன முத்தா போச்சா என பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக் பாஸ் கேமில் வீக்கான போட்டியாளர்களுக்கு இடமில்லை என்றும் நல்லா யாரு கேம் ஆடுறாங்க என்பது தான் முக்கியம் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

பல்டி அடிக்கும் பாவனி
காயினை திருட சுருதிக்கு உதவி விட்டு பாவனி அப்படி செய்யவே இல்லை என்று பல்டி அடிக்கிறார் பாவனி என்றும் " எப்ப பாத்தாலும் அடுத்துவங்கள பத்தி பேசுறதுதான் பாவனியின் வேலை... ஆனால் அவர் யார பத்தியும் பின்னாடி பேச மாட்டனு அவங்களே சொல்லிப்பாங்க" என ட்ரோல் செய்து வருகின்றனர்.

சுருதி ஆட ஆரம்பிச்சிட்டா
சுருதி ஆன் ஃபயர்.. ஆமாம்.. இது கேம் தான் யார் காயினை வேண்டுமானாலும் யார் வேண்டுமானால் திருடலாம். இவங்க பாவம் அவங்க பாவம்லாம் பார்க்கக் கூடாது. சுருதி கேம் ஆட ஆரம்பிச்சிட்டா என சுருதியின் ஆர்மியினர் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

அக்ஷரா திருடுவாரா
தாமரையிடம் இருக்கும் காயினை சுருதி திருடியது எல்லாம் மேட்டரே இல்லை. அடுத்து பாவனியிடம் இருக்கும் காயினை அக்ஷரா திருடினால் தான் பிக் பாஸ் வீடே இரண்டாகும் அளவுக்கு பிரச்சனைக்கு வெடிக்கும் என்று அடுத்த ஆட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











