சிவாஜியே நிஷா பேச்சை கேட்டு அழுதுட்டாரு.. இந்த வாரம் சென்டிமென்ட் வாரமா.. பிக்பாஸை ஓட்டும் ரசிகாஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது புரமோ தற்போது வெளியான நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் அதனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில், அடுத்த புரமோவை விஜய் டிவி திடீரென வெளியிட்டுள்ளது.

ஹார்ட் பிரேக் டாஸ்க் முடிந்து அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சண்டை முடிந்த பிறகு போட்டியாளர்கள் தங்கள் சொந்த கதையையும் சோகக் கதையும் சொல்ல உள்ளனர்.

அழுகாச்சி புரமோ

அழுகாச்சி புரமோ

அறந்தாங்கி நிஷா, மற்ற போட்டியாளர்களுக்கு முன் நின்றபடி, தனது வாழ்வில் நடந்த ஒரு சோகக் கதையை கூறி அழுகிறார். குழந்தைக்கு தன்னால் விபத்து நேர்ந்த சோகக் கதையை அவர் கூற கேப்ரில்லா, ரியோ ராஜ் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் அழும் புரமோவை விஜய் டிவி வெளியிட்டது.

சிவாஜியே அழுதுட்டார்

சிவாஜியே அழுதுட்டார்

இந்நிலையில், இந்த 4வது புரமோவையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். நிஷாவின் கண்ணீர் கதையை கேட்டு நடிகர் திலகம் சிவாஜியே அழுதுவிட்டார் என அவரது போட்டோ ஒன்றை ஷேர் செய்து செம ட்ரோல் செய்துள்ளனர்.

மூடிட்டு பொழப்ப பாருங்க

மூடிட்டு பொழப்ப பாருங்க

"எல்லாரும் மூடிட்டு பொழப்ப பாருங்கடா டேய், அவன் அவன் வாழ்க்கையில இதைத் தாண்டி நிறைய சோகங்கள் இருக்கு, நம்ம சொன்னா ஒரு பயளும் கேட்க மாட்டானுங்க..." என இந்த நெட்டிசன் இன்னும் ஒரு படி மேலே போய் இந்த சென்டிமெண்ட் எபிசோடை கலாய்த்து உள்ளார்.

இல்லைன்னா மாட்டிக்குவோம்

இல்லைன்னா மாட்டிக்குவோம்

கடந்த பல ஆண்டுகளாக பாபநாசம் படத்தின் இந்த டெம்பிளேட் பல மீம் ரசிகர்களுக்கு உதவி செய்துள்ளது. இந்த முறையும், வேற லெவலில் வச்சு செய்ய உதவி வருகிறது. டைரக்டர்: எல்லாரும் ஒரே டைம்ல ஒண்ணா கண் கலங்கணும்.. மாத்தி மாத்தி பண்ணா மாட்டிக்குவோம் என பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநரையும் சேர்த்து ட்ரோல் செய்துள்ளனர்.

இந்த வாரம்

இந்த வாரம்

இந்த வாரம் சென்ட்டிமெண்ட் வாரம் என உலகநாயகன் கமல்ஹாசன் கையெடுத்துக் கும்பிடும் ஜிஃப் இமேஜை போட்டு இந்த எபிசோடை கழுவி ஊற்றி உள்ளனர். சில தீவிர ரசிகர்கள், நிஷாவின் வாழ்க்கையில் நடைபெற்ற சோகங்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Anitha Vs Suresh நடந்தது என்ன? யாரு மேல தப்பு | Bigg Boss Tamil
சனம் ஷெட்டி சொல்லுவாங்களா

சனம் ஷெட்டி சொல்லுவாங்களா

சனம் ஷெட்டி தனக்கு என்ன உடல் உபாதை என இந்த டாஸ்க்கில் சொல்லி புலம்புவாங்களா? துவக்க விழா நிகழ்ச்சியில் கமல் ஓப்பன் பண்ண அந்த விஷயத்தை இன்னைக்கு முழுசா அவங்க சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கலாம் என சனம் ஷெட்டியின் ரசிகர்களும் இந்த எபிசோடை காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X