Kalanithi Maran - விஜய்யை வைத்து செய்த கலாநிதி மாறன்.. கடைசில இப்படி ஆகிப்போச்சே

சென்னை: Jailer Audio Launch (ஜெயிலர் இசை வெளியீட்டு விழா) ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலாநிதி மாறன் விஜய்யை வைத்து பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் பான் இந்தியா அளவிலான ஸ்டார்கள் களமிறங்கியிருக்கும் இப்படம் ரஜினிக்கும், நெல்சனுக்கும் ரொம்பவே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பீஸ்ட் படத்தால் தன்னை ரோஸ்ட் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க நெல்சனும், தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்க ரஜினிகாந்த்தும் காத்திருக்கின்றனர்.

Netizens Trolled Vijay And His Fans Due To Kalanithi Maran Speech in Jailer Audio Launch

மாஸ் காட்டும் டிக்கெட் புக்கிங்: வெளிநாட்டில் சில நாட்களுக்கு முன்னதாக ஆரம்பித்த டிக்கெட் புக்கிங் இந்தியாவில் நேற்று தொடங்கியது. புக்கிங் தொடங்கியதுமே ரசிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு டிக்கெட்டை புக் செய்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்கின்றனர். எனவே நிச்சயம் முதல் நாள் வசூலில் ஜெயிலர் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: ரஜினியின் எந்தப் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் இல்லாத எதிர்பார்ப்பு ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இருந்தது. அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரேஸில் விஜய்யும் இப்போது இருப்பதாக எழுந்த பேச்சுதான். சூப்பர் சுப்பு எழுதிய ஹுக்கும் பாடலில் விஜய் நேரடியாக தாக்கப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது.

Netizens Trolled Vijay And His Fans Due To Kalanithi Maran Speech in Jailer Audio Launch

ரஜினியின் பேச்சு: அந்த சர்ச்சை அடங்குவதற்குள் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை சொன்னார். அதனையடுத்து காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது.ஆனால் அந்தக் கதைக்கு பிறகு அவர், நான் காக்கா என்று யாரையும் சொல்லவில்லை. நீங்களா மீடியா, சோஷியல் மீடியாவில் கெளப்பி விட்றாதீங்க என்ற கோரிக்கையும் வைத்திருந்தார். அது நேற்று தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகுதான் பெரும்பாலானோருக்கு தெரியவந்தது. எனவே இனியாவது இந்த சண்டை கொஞ்சம் ஓயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலாநிதி மாறன்: ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு ஒருபக்கம் ட்ரெண்டாக நேற்று முழு நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கலாநிதி மாறனின் பேச்சை மறுபக்கம் ட்ரெண்டாகிவருகின்றனர். அந்த விழாவில் பேசிய அவர், என் தாத்தா ரஜினியை ரசித்தார். நான் ரசிக்கிறேன், எனது மகள் ரசிக்கிறார். எனது பேரனும் பேத்தியும் ரசிப்பார்கள்.அதனை சூப்பர் சுப்பு பாடலில் எழுதிவிட்டார். ரஜினி சாருக்கு போட்டியே இல்லையா என்றால் இருக்கிறார். விஜய் சொன்னது மாதிரி ரஜினிக்கு ரஜினியேதான் போட்டி" என்றார்.

என்ன விஷயம்: மேற்கூறியபடி அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது, விஜய் சொன்னது மாதிரி என்று கூறுவதற்கு முன்னர், ரஜினிக்கு போட்டியே இல்லையா என்றால் இருக்கிறார்; 'சகோதரர் தளபதி விஜய்' என சொல்லி சின்ன கேப் விட்டார். அதனை கேட்ட பலரும் ஓ ரஜினிக்கு போட்டி விஜய்தான் என கலாநிதி சொல்லவருகிறார் என நினைக்கும்போது 'சகோதரர் தளபதி விஜய் சொன்னது மாதிரி' என அலேக்காக மாற்றினார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் கலாநிதி விஜய் என சொல்லி கேப் விட்டதும் அடடா தளபதியைத்தான் அவர் ரஜினிக்கு போட்டி என சொல்லவருகிறார் என்று மகிழ்ந்திருப்பார்கள். கடைசியில் ரஜினிக்கு ரஜினிதான் போட்டி என சொல்லி அனைவருக்கும் பல்பு கொடுத்துவிட்டார் கலாநிதி மாறன் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X