மக்கள் ஓட்டுத் தான் மகுடத்தை சூட்டும்னா அப்போ ஆரி தான் டைட்டில் வின்னர்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே பற்றிய புரமோவை பார்த்து ஆரி தான் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றான்ர்.
ஆனால், விஜய் டிவி தனது சித்து விளையாட்டை விளையாடினால், ஆரிக்கு டைட்டில் கிடைக்காது, ரியோ அல்லது ரம்யாவுக்குத் தான் கொடுபார்கள் என்றும் கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.
அப்பாடா ஒரு வழியா இந்த மொக்கை சீசன் முடியப் போகுதுன்னு சில நெட்டிசன்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

டைட்டில் வின்னர் ஆரி
"நாங்க ஆரிக்கு ஓட்டு கண்டிப்பா போடுறோம்!... ஆனா அதை நீங்க மாற்றாம சொல்லனும்!..", கமல் சார் உங்களை ரொம்பவே நம்புறோம், நேர்மையாக ஓட்டுக்களை வைத்து மகுடம் சூட்டப்பட்டால் ஆரி தான் டைட்டில் வின்னர், மத்த யாராவது வின் பண்ணா, அந்த சீட்டிங்குக்கு நீங்களும் உடந்தை என போட்டுத் தாக்கி வருகின்றனர்.

வேற யாரு
கிராண்ட் ஃபினாலேவில் டைட்டிலை தட்டித் தூக்கப் போவது வேற யாரு நம்ம ஆளுதான் என ஆரியின் போட்டோவை போட்டு வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். இத்தனை வாரங்களாக முதல் ஆளாக சேவ் ஆகும் போதே ஆரிக்குத் தான் அதிக ஓட்டுக்கள் வந்து இருப்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். மக்களை ஏமாற்றினால், அதற்கான விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்றும் கமெண்ட்டுகள் மிரட்டுகின்றன.

பாலா தான் ஜெயிக்கணும்
பாலாவின் ரசிகர்கள், பாலாவுக்குத்தான் டைட்டில் வின்னர் கொடுக்க வேண்டும். மத்தபடி யாருக்கு கொடுத்தாலும், நாங்கள் அதை ஏற்க மாட்டோம் என கூறி வருகின்றனர். பாலா டைட்டிலை வின் பண்ண வாய்ப்பில்லை, வேண்டுமென்றால், 5 லட்சத்தை தூக்கிட்டு ஓடிடுவாரு என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ரம்யாவுக்கும் வாய்ப்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டிலை தட்டிச் செல்ல ரம்யா பாண்டியனுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், முதல் சீசனில், ஆண் போட்டியாளரான ஆரவ், இரண்டாவது சீசனில், பெண் போட்டியாளரான ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் மீண்டும் ஆண் போட்டியாளரான முகேன் ராவ் வெற்றி பெற்றதால், இந்த முறை பெண் போட்டியாளரான ரம்யா பாண்டியன் டைட்டில் வின் பண்ண வாய்ப்பிருக்கு, மேலும், அதற்கு அவர் தகுதியானவர் தான் என அவரது ரசிகர்கள் ரம்யாவை ஜெயிக்க வைக்க ஓட்டுப் போட்டு வருகின்றனர்.

ஆரி தம்பிக்குத் தான்
மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆரியின் புகழ் எதிரொலித்து வருகிறது. பாட்டிம்மா யாருக்கு ஓட்டுப் போடுவீங்க என கமல் கேட்பது போலவும், ஆரி தம்பிக்கு மட்டும் தான் பா என வயதானவர்களும் சொல்லும் அளவுக்கு மீம்கள் பறக்கின்றன.

இதுக்கு வெயிட்டிங்
வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கையால் டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை ஆரி வெல்லும் நாளை எதிர்பார்த்து வெயிட்டிங்கில் உள்ளோம் என ஆரியின் ஆர்மியினர் கொண்டாடி வருகின்றனர்.

ஏமாத்திடுவாங்க
விஜய் டிவி கண்டிப்பா ஆரிக்கு டைட்டிலை தூக்கிக் கொடுக்காது, ரியோவுக்குத் தான் டைட்டில் கிடைக்கும், மக்கள் ஓட்டுக்கள் தான் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொல்வதெல்லாம் சுத்த பித்தலாட்டம். அப்படி பார்த்தால், சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி எல்லாம் வெளியவே போயிருக்க மாட்டாங்க என கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











