என்னது கங்கனா பகத் சிங்கா? ட்ரோல் மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.. வைரலாகும் "Bhagat Singh"
சென்னை: கங்கனா ரனாவத்தின் துணிச்சலை பார்த்து பகத் சிங் என கமெண்ட் செய்துள்ளார் நடிகர் விஷால்.
பகத் சிங் என கங்கனா ரனாவத் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கங்கனா ரனாவத்தை கலாய்த்தும், நடிகர் விஷாலை கலாய்த்தும் ஏகப்பட்ட ட்வீட்கள், மீம்கள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சியை எதிர்த்து தனி ஒரு ஆளாய் போராடி வரும் கங்கனா ரனாவத்தை அப்படி அழைப்பதில் தவறு இல்லை என்று ஆதரவு கரங்களும் பெருகி உள்ளன.

பகத் சிங்
கங்கனா ரனாவத்திற்கு பாலிவுட் நடிகர்களே ஆதரவு குரல் கொடுக்காத நிலையில், கோலிவுட் நடிகரான விஷால், அவரை பகத் சிங் உடன் ஒப்பிட்டு ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். தனி ஒரு ஆளாக மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனாவை எதிர்த்து போராடி வரும் நீங்க உண்மையிலேயே பகத் சிங்குக்கு நிகரானவர் தான், உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என பதிவிட்டுள்ளார்.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்
பாலிவுட் ரசிகர்கள், யாருப்பா அந்த விஷால், எங்களுக்கே பார்க்கணும் போல இருக்கு என அவரை பற்றி கூகுளில் எல்லாம் தேடவே ஆரம்பித்து விட்டனர். ஓ காரில் பறந்த படி வருவாரே நம்ம ஆம்பள விஷால் அவர் தான என கண்டுபிடித்து "Bhagat Singh" என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

குவியும் மீம்கள்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை சுதந்திர போராட்டத்திற்காக உயிர் நீத்த பகத் சிங் உடன் ஒப்பிட்டு பேசுவதை எதிர்த்தும், கண்டித்தும் ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க, நடிகர் விஷால் குறித்தும், கங்கனா பற்றியும் குவியும் மீம்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

பாருங்க இவங்க தான் இப்போ பகத்சிங்
கோமாளி படத்தில் வரும் காமெடியை போல, இப்போ இவங்க தான் பகத் சிங் என ஏகப்பட்ட பேர் கலாய்த்து தள்ளி வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத் வெள்ளை நிற பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும், சிலர், இது என்னடா பகத் சிங்குக்கு வந்த சோதனை என புலம்பி தள்ளுகின்றனர்.

அவர் மட்டும் இதை பார்த்தா
மேலும், சில நெட்டிசன்கள், இப்போ பகத் சிங் மட்டும் உயிரோடு இருந்து இந்த விஷயத்தை கேள்விப் பட்டால், இப்படித்தான் ரியாக்ஷன் பண்ணுவார் என ரியாக்ஷன் புகைப்படங்களை எல்லாம் போட்டு, நடிகர் விஷால் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் டேக் செய்து கலங்கடித்து வருகின்றனர்.

அதை மட்டும் ஏத்துக்க முடியாது
மிகவும் படு கேவலமாகவும், வன்மையாக கண்டித்தும் ஏகப்பட்ட ட்வீட்களும், மீம்களும் அந்த ஹாஷ்டேக்கை நிரப்பி வருகின்றன. தூள் படத்தில் வரும் விவேக்கின் காமெடியை போட்டும் கலாய்த்து தள்ளுகின்றனர். புரட்சி தளபதின்னு டைட்டில் வச்சது கூட விட்ரலாம்.. ஆனால், பகத் சிங்னு விட்ட பாரு ஒரு பீலா அதை மட்டும் ஏத்துக்க முடியாது என கிண்டல் செய்துள்ளனர்.

கங்கனா ஆர்மி ஆதரவு
ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும் துணிச்சலாக மும்பை வந்த கங்கனாவிற்கு ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் ஆர்மியாக மாறி உள்ளனர். விஷாலின் இந்த கருத்தை அவர்கள் ஆமோதித்து, ஏற்கனவே கங்கனா லக்ஷ்மி பாயாகவும், பகத் சிங்காகவும் மாற வேண்டிய சூழல் உள்ளது என பதிவிட்ட ட்வீட்களை ஷேர் செய்து விஷாலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











