கொடுத்த காசுக்கு மேல கூவிய அர்ச்சனா.. ஓவர் ஆக்டிங் என மக்கள் இப்படி ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்களே!
சென்னை: ஜீ தமிழ் விஜேவான அர்ச்சனா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நேற்று அதிரடி என்ட்ரி கொடுத்தார்.
வந்ததும் வராததுமாக நம்ம நம்பியார் பிக் பாஸ், அர்ச்சனா கையால மற்ற போட்டியாளர்களுக்கு பட்டம் கொடுக்க வச்சி வேலையைக் காட்டினார்.
அர்ச்சனா ஒழுங்கா, வெளியில இப்படி சொல்லிக்கிறாங்க, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல என அந்த பட்டங்களை கொடுத்திருந்தால், மக்கள் இப்போ அவரை இந்த அளவுக்கு ஓட்டி இருக்க மாட்டாங்க.

கொடுத்த காசுக்கு மேல கூவுறது
ஆனால், அர்ச்சனா என்னவோ அவரே இந்த பட்டத்தை எல்லாம் வேண்டுமென்றே போட்டியாளர்களுக்கு கொடுக்கிறது மாதிரி போட்ட சீனை பார்த்த ரசிகர்கள், ஒரே செகண்டில் அவருக்கு ஓவர் ஆக்டிங் அர்ச்சனா என்கிற பட்டத்தை தூக்கி மாட்டி உள்ளனர். கொடுத்த காசுக்கு மேல கூவுறதுங்கறது இதுதான் எனவும் பங்கம் பண்ணி வருகின்றனர்.

நிறைய லூசு
அர்ச்சனாவை மட்டும் இல்லை ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களையும் இந்த நெட்டிசன் மரண ஓட்டு ஓட்டியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே நிறைய லூசுகள் இருக்கு.. இப்ப இந்த லூசு வந்திருச்சா? இது என்ன பண்ண போகுதோ? என அர்ச்சனாவை போலவே ஒருமையில் பேசி கலாய்த்துள்ளார்.

சபாஷ் சரியான போட்டி
சிம்புவின் வாலு படத்தில், சந்தானம் விடிய விடிய தலை நிறைய முடி வைத்திருக்கும் சக நடிகருடன் இணைந்து முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சியை போட்டு, சுரேஷையும் அர்ச்சனாவையும் இந்த ரசிகர் பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளார்.

மூன்று டிவிக்களின் சங்கமம்
இந்த சீசன் பிக் பாஸ் வீடு சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என மூன்று டிவிக்களின் சங்கமமாக மாறி விட்டது என அர்ச்சனாவின் வரவை தொடர்ந்து பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர். இந்த பொழப்புக்கு, புதுசா ஒரு சீரியல் எடுத்து நடத்தலாம், இதுக்கு பேரு ரியாலிட்டி ஷோவாம் என்றும் நக்கல் அடித்துள்ளனர்.

பாலாஜிக்கு போட்டதை நீங்க மாட்டிக்கோங்க
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் வைல்டு கார்டு என்ட்ரியான அர்ச்சனாவின் ஆர்ப்பாட்டமான வரவை பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள், உங்க ஷோவை போலவே இங்கேயும் இரிடேட் பண்ணாதீங்க, பாலாஜிக்கு போட்டதை நீங்க மாட்டிக்கோங்க, சிம்ப்ளி வேஸ்ட். இங்க ஜீரோவும் ஹீரோவாக மாற முடியும் என அர்ச்சனாவுக்கு அர்ச்சனைகளாக விழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











