அப்போலாம் இப்படி டிரெஸ் போட்டா பைத்தியம்னு சொல்லுவாங்க.. யாஷிகா ஆனந்தை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் கந்தல் கந்தலாக கிழிந்த ஜீன்ஸ் உடையை உடுத்திக் கொண்டு எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
அதைப் பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள் வழக்கம் போல ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
கிழிந்த டெனிம் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளார் யாஷிகா ஆனந்த்

கிழிந்த ஆடையுடன்
கந்தல் கந்தலாக கிழிந்த டெனிம் உடையை அணிந்து கொண்டு நடிகை யாஷிகா ஆனந்த் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இந்த லாக்டவுன் காலத்திலும் உங்களால் மட்டும் தான் இப்படி வெரைட்டி வெரைட்டியாக போட்டோஷூட் நடத்த முடியும் என ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

பேண்ட் இல்லை
முழு ஜீன்ஸ் உடையை அப்படியே கிழித்து விட்டு டவுசர் போலவும், ஷூ போலவும் மாற்றிக் கொண்டாரா யாஷிகா என்கிற குழப்பத்தில் அந்த போட்டோவை ஒரு முறைக்கு பல முறைகள் பார்த்து வரும் ரசிகர்கள், மற்ற இடங்களுக்கும் ஜூம் போட்டு பார்த்து வருகின்றனர்.

என்ன சிம்ரன் இதெல்லாம்
கட்டுக்கடங்காத கவர்ச்சி உடையில் நடிகை யாஷிகா இதற்கு முன்னதாக பல முறை போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். இந்நிலையில், இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்த ரசிகர்கள்.. என்ன சிம்ரன் இதெல்லாம் என வழக்கமான ட்ரோல் பன்ச்சை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

செம பசியோ
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகாவின் இந்த புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம பசி போல அவங்களுக்கு இப்படி ஆடையை அக்கு அக்காக பிச்சுத் திண்ணுருக்காங்க என்றும் வச்சு செய்து வருகின்றனர்.

அப்போ பைத்தியம்
வடிவேலு காமெடி ஒன்றில் நல்லா டிரெஸ் பண்ணிட்டு இருக்கிற ஒருத்தர் பின்னாடி போகும் போது டிரெஸ் எல்லாம் கிழிந்து போயிருக்கும். அப்போலாம் இப்படி கிழிந்த உடையை போட்டால் பைத்தியம் என்பார்கள்.. இப்போ அதுவே ஃபேஷனாக மாறிவிட்டது என யாஷிகாவை பங்கம் பண்ணி வருகின்றனர்.

கைதான நடிகருக்கு ஆதரவு
சிறுமி ஒருவருக்கு சினிமா ஆசை காட்டி பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக இந்தி சீரியல் நடிகர் பியர்ல் வி புரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு இருந்தார். புரி அப்படிப்பட்டவர் கிடையாது என நடிகை யாஷிகா ஆனந்த் அவருக்கு ஆதரவாக பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் இந்தியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











