யோகிபாபுவின் பேய் மாமா போஸ்டர்...கலாய்க்கும் நெட்டிசன்கள்...இது தான் காரணமா

சென்னை : கோலிவுட்டில் படிப்படியாக உயர்ந்து, டாப் இடத்திற்கு வந்தவர்களில் யோகிபாபுவும் ஒருவர். ஜுனியர் ஆர்டிஸ்டாக திரையுலக பயணத்தை துவங்கிய யோகிபாபு இன்று முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார்.

ஒரே நேரத்தில் பிஸியாக பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் யோகிபாபு, சில படங்களில் லீட் ரோலிலும் நடித்து வருகிறார். தற்போது யோகிபாபு கிட்டதட்ட 20 படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய்யுடன் பீஸ்ட், அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் யானை உள்ளிட்ட முக்கிய படங்களும் அடங்கும்.

பேய் மாமா போஸ்டர்

பேய் மாமா போஸ்டர்

அப்படி யோகிபாபு லீட் ரோலில் நடிக்கும் பேய் மாமா படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி சஸ்பென்ஸ் படமான இந்த படத்தின் போஸ்டரை தான் தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து, கலாய்த்து வருகின்றனர்.

காப்பி அடித்த போஸ்டர்

காப்பி அடித்த போஸ்டர்

செப்டம்பர் 24 ம் தேதி ரிலீசாக உள்ள பேய் மாமா படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர், பாலிவுட் படமான Bhoot படத்தின் போஸ்டரை அப்படியே காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளது தான். bhoot படத்தின் போஸ்டரில் இருக்கும் ஹீரோ விக்கி கவுசலின் முகத்திற்கு பதிலாக, Face Swap technology ஐ பயன்படுத்தி, லீட் ரோலில் நடிக்கும் யோகிபாபுவின் முகத்தை வைத்து வெளியிட்டுள்ளனர்.

ஒரே வித்தியாசம்

ஒரே வித்தியாசம்

இரண்டு போஸ்டருக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால், பூட் படத்தின் போஸ்டரில் விக்கி கவுசலின் ஃபோட்டோ மட்டும் இடம்பெற்றிருக்கும், ஆனால் பேய் மாமா பட போஸ்டரில் யோகிபாபுவுடன் மற்ற நடிகர்களின் ஃபோட்டோக்களையும் அங்கங்கே இருப்பது போல் வைத்து அமைத்துள்ளனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஏன் இப்படி அப்பட்டமாக காப்பி அடித்துள்ளீர்கள். காப்பி அடிக்க ஒரு அளவு வேண்டாமா என பலர் கேள்வி கேட்டு கலாய்த்து வருகின்றனர். அதே சமயம், படத்தை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே படக்குழுவினரின் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனரோ என சிலர் சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றனர்.

ரிலீஸ் போஸ்டர்

ரிலீஸ் போஸ்டர்

பூட் படம் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீசிற்காக தான் இந்த விக்கி கவுசலின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை அப்படியே மாற்றி பேய் மாமா படத்தின் ரிலீசுக்கான போஸ்டராக வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X