என்ன கன்றாவி டிரெஸ் இது.. காத்தடிச்சா என்ன ஆகுறது.. டிவி நடிகையை நக்கல் அடிக்கும் நெட்டிசன்ஸ்!
இத்தாலி: லவ் ஐலாண்ட், எக்ஸ் ஃபேக்டர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் நடித்து பிரபலமானவர் சாரா மெக்டெர்மாட்.
Recommended Video
ஆடை, அணிகலன், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் பெரிய பிராண்ட் நிறுவனங்களுக்கு விளம்பர நடிகையாகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
தற்போது, ஹேண்ட் பேக் ஒன்றை அறிமுகப்படுத்தும் விதமாக அவர் கொடுத்திருக்கும் போஸ், நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறது.

இவரும் ஒரு யூடியூபர்
டிவி நடிகையாக மட்டுமின்றி, தனக்கென தனியாக ஒரு யூடியூப் பக்கத்தையும் சாரா மெக்டெர்மாட் நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக யூடியூபில் கலக்கி வரும் இவருக்கு 63 ஆயிரம் சப்ஸ்கிரைபர் உள்ளனர். தனது ஃபிட்னஸ் குறித்தும், எப்படி சூப்பரான இன்ஸ்டாகிராம் போட்டோ எடுப்பது குறித்தும் ஏகப்பட்ட வீடியோக்களை போட்டு வருகிறார்.

பீச் பிரியை
இவர் எந்த அளவுக்கு உணவுப் பிரியையோ, அதே அளவுக்கு பீச் பிரியையும் கூடத்தான். பிகினி அணிந்து போஸ் கொடுக்கும் எல்லா மாடல்களுக்கும் கடற்கரையின் மீது இன்றியமையாத ஒரு காதல் எப்போதுமே இருக்கும். ஆனால், இவர் கடந்த 2018ம் ஆண்டு லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து, கடற்கரையிலேயே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

ராப் சிங்கர்
எசெக்ஸ் எனும் அரசு நிறுவனத்தில் பணியாற்றி வந்த சாரா மெக்டெர்மாட், கடந்த 2018ம் ஆண்டு லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது வேலையை விட்டு விட்டு, அந்த டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பாடுவதிலும் ஆர்வம் கொண்ட இவர், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எக்ஸ் ஃபேக்டர் எனும் பாட்டு பாடும் ஷோவிலும் கலந்து கொண்டு பிரபலமானார். மேடை ஏறியும் பல முறை இசைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார்.

அது ரொம்ப நல்ல விஷயம்
ரோஜாப்பூ குளியல் உடலுக்கு மிகவும் நல்லது என அரை நிர்வாணமாக தோழி ஒருவருடன் குளிக்கும் ஹாட் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஹெல்த் டிப்ஸும் கொடுத்துள்ளார் இந்த டிவி நடிகை. ஸ்லிம்மாக இருப்பது எப்படி என்பது குறித்தும், தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது தனது யூடியூப் பக்கத்தில் ஐடியா கொடுத்து வருகிறார்.

நாக்கை நீட்டியபடி
எப்ப பார்த்தாலும், இப்படி எதையாவது தலையில் தூக்கி வச்சு நாக்கை நீட்டியபடி போஸ் கொடுப்பது தான் சாரா மெக்டெர்மாட்டின் சிக்னேச்சர் ஸ்டைல் போல, முன்னதாக பிரா விளம்பரத்துக்கு தர்பூசணி பழத்தை தலை மீது தூக்கி வைத்து போஸ் கொடுத்திருப்பார். இப்போ, ஹேண்ட் பேக் ஒன்றை விளம்பரப்படுத்த இப்படி போஸ் கொடுத்துள்ளார்.

காத்தடிச்சா என்ன ஆகும்
ஹேண்ட் பேக் விளம்பரத்துக்கு ஏன்மா இப்படி ஒரு கன்றாவி போஸ் என்றும், மேல மட்டும் நாட் கட்டியிருக்க, காத்தடிச்சா டாப்ஸ் தூக்கிக்காது, ஆனாலும், உங்களுக்கு அந்த டிரெஸ் மேல ரொம்ப நம்பிக்கைத் தான் என நெட்டிசன்கள் தொடர்ந்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட்டுகளால் ட்ரோல் செய்து வருகின்றனர். சாராவின் ரசிகர்கள் இந்த அல்ட்ரா கவர்ச்சி உடையை பார்த்து ஜொள்ளும் விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











