சீக்கிரம் வெளியில வா தம்பி…பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நேற்று மிகவும் பிரம்மாண்டமாக அனைவரும் வியந்து போகும் அளவிற்கு இடைவிடாது 6 மணி நேரம் ஒளிபரப்பானது.
16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள்.
யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வாய்க்கு வந்தபடி பேசிய பழைய வீடியோவை வெளியிட்டு நெட்சன்ஸ் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 5ம் சீசன் மிக பிரம்மாண்டமாக முறையில் தொடங்கியது. முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டை கமல் சுற்றி காட்டினார். கடந்த வருடத்தை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு மிக பெரிதாகவே இருக்கிறது. பெரிய பெட்ரூம், லிவிங் ஏரியா என பெரிதாகவே இருக்கிறது.

இசைவாணி
பிக் பாஸ் 5ம் சீசனில் முதல் போட்டியாளராக இசைவாணி கமல் அறிமுகம் செய்து வைத்தார். அவர் கானா பாடல் உடன் என்ட்ரி கொடுத்தார். அவர் பாட செல்லும்போது எல்லா மேடைகளிலும் அவருக்கு பாட கடைசியாக தான் வாய்ப்பு தருவார்களாம். ஆனால் பிக் பாஸில் முதல் ஆளாக நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று பெருமையுடன் பேசினார்.

ராஜு ஜெயமோகன்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன் இரண்டாவது நுழைந்து பாக்யராஜ் போல மிமிக்ரி செய்து அசத்தினார். இவர் பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

அபிஷேக் ராஜா
பிரபல ஆன்லைன் தொகுப்பாளர் அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியா வளர்ச்சி பற்றி கமல் பேசி அவருக்கு இண்ட்ரோ கொடுக்கிறார். என்னால் 100 நாட்கள் எல்லாம் நடிக்க முடியாது, நான் நானாக இருக்கப்போகிறேன். பிக்பாஸ் ஜெயிச்சால் செமயாக வாழலாம் என காட்டபோகிறேன் என அபிஷேக் ராஜா கூறினார்.

வைரல் வீடியோ
இந்நிலையில், அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், கமல் குறித்தும் வாய்க்கு வந்தபடி பேசிய பழைய வீடியோவை நெட்டிசன்கள் தேடி எடுத்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில், ஊருக்கே தெரியும் உங்கள கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு CM ஆகணும்னு நீ பண்ற வேலை இருக்கே முடியலடா என்று பேசி இருக்கிறார்.

மரணக்கலாய்
யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா மரணமாக கலாய்த்து வரும் நெட்டிசன்ஸ் இந்த வீடியோ கமல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் என்றும், தம்பி முதல் ஆளா எவிக்ஷன் ஆகிவாப்பா என்றும் அவரை கலாய்த்து வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











