விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க.. கிச் கிச்ச போக்குங்க.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! #TrollMaterialBigil
சென்னை: பிகில் ட்ரெயிலரை விக்ஸ் மாத்திரை விளம்பரம் மற்றும் சக் தே இந்தியா ஆகியவற்றுடன் சேர்த்து வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
விஜய், அட்லி, ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் பிகில். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார்.
இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரெயிலர் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் நேற்று மாலை வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ட்ரோல் மெட்டீரியல்
#BigilTrailer என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து டிவிட்டரை திணற செய்தனர். அதே நேரத்தில் அஜித் ரசிகர்களும் விஜய் ஹேட்டர்ஸும் #TrollMaterialBigil என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிகில் ட்ரெயிலரை வச்சு செய்தனர்.
விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க
குறிப்பாக ட்ரெயிலரில் வயதான விஜய் பிகிலே.. என கைகளை தூக்கியப்படி கத்தும் காட்சியை மரண ட்ரோல் செய்தனர். விஜய் பிகிலு என கத்தும் காட்சியை விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க கிச் கிச்ச போக்குங்க என்ற விளம்பரத்துடன் சேர்த்து கலாய்த்துள்ளனர்.
குட் மார்னிங் கோச்
இதேபோல் சக் தே இந்தியா படத்தில் நடிகர் ஷாரூக் கான், பல்பீர் கவுர் என்ற மாணவியின் அறிமுகத்தின் போது, மீண்டும் மீண்டும் என கேட்பார். அதே காட்சியை ட்ரெய்லரில் குட் மார்னிங் கோச் என இந்துஜா கூற விஜய் கேக்கல என கூறுவதாக காட்சியாக்கியுள்ளார் அட்லீ.
இதுக்குதான் ஈய்யம் பூசினீங்களா
இது அதுல்ல.. ஆத்தி.. சக் தே இந்தியாக்குதான் ஈய்யம் பூசி எடுத்துட்டு வந்துருக்கீங்களா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ட்ரோல் வீடியோ
பிகில் ட்ரெய்லரையும் இரண்டையும் ஒப்பிட்டு பயங்கரமாக கலாய்த்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ். இந்த ட்ரோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











