அன்று அப்படி சொன்ன ரஜினி.. இன்று யோகி காலில் விழலாமா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: உபி முதல்வர் யோகி காலில் விழுந்து ஆசி வாங்கியது குறித்து ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்த நிலையிலும் இணையத்தில் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். வெளியான முதல் நாளே வசூலை அள்ளி வருகிறது.
ரஜினிகாந்த்: லால் சலாம், ஜெயிலர் படப்பிடிப்பு, இசைவெளியீட்டு விழா என படு பிஸியாக இருந்த ரஜினி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்றார். மாலத்தீவிற்கு சென்று ஓய்வு எடுத்த ரஜினி இமயமலை செல்லமாட்டார் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சென்றார்.

அரசியல் தலைவர்களை சந்தித்தார்: இமயமலை பயணத்தை முடித்த ரஜினிகாந்த், உத்திரபிரதேசத்தில் ஜார்கண்ட் சென்று மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் காங்கிரஸ் எம்எம்ஏ அம்பா பிரசாத், உபியில் ஆளுநர் ஆனந்திபென் பர்த்டே, துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா என பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார்.
காலில் விழுந்தார்: இதைத் தொடர்ந்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வீட்டிற்கு சென்று சந்தித்தார், காரில் இருந்து இறங்கி வந்த ரஜினியை முதல்வர் யோகி வாசலுக்கே வந்து வரவேற்றார். யோகியைப் பார்த்த ரஜினி, படார் என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு பூங்கொத்தும் சிறிய விநாயகர் பிள்ளையையும் பரிசாக கொடுத்தார்.
வெடித்த சர்ச்சை: ரஜினிகாந்த் ஆதித்யநாத்திடம் ஆசிர்வாதம் வாங்கியது போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. தன்னைவிட வயதில் சிறியவரான யோகியின் காலில் விழுந்ததால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் கொடி கட்டி பறந்தன.

அது என்ன பழக்கம்: இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,சந்நியாசிகள், யோகிகள் என்னை விட வயதில் குறைவானவர்களாக இருந்தாலும், அவர்களின் காலில் விழுவது எனது பழக்கம். அதைத்தான் நான் செய்தேன் என்று ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார்.
ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்: இந்த பதிலைக் கேட்டு மேலும் டென்ஷனான நெட்டிசன்ஸ், காலா படத்தில் வரும் காட்சியையும், சென்னையில் ரசிகர்களை சந்தித்த போது கடவுள், அம்மா, அப்பா என மூன்று பேரில் காலில் மட்டும் தான் விழவேண்டும் என்று பேசிய வீடியோவை வெளியிட்டு, அன்று அப்படி... இன்று இப்படி... நாளை? என்றும், என்ன தலைவா உங்க பழக்கம் என்று மீம்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











