Jailer: கதையில் கோட்டைவிட்ட நெல்சன்.. ஜெயிலரில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 10ந் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரஜினி, சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 430 கோடி வசூலித்துள்ளது. விரைவில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.o திரைப்படத்திற்கு பிறகு எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம், அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் கதையாக இருந்ததால், பெரியதாக எடுபடவில்லை. இதனால், அடுத்து ஒரு வெற்றியை கொடுத்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஜினி, பல இயக்குநர்களிடம் கதையை கேட்டு இறுதியாக நெல்சன் கதைக்கு ஓகே சொன்னார்.
கோட்டைவிட்ட நெல்சன்: ஜெயிலர் படம் கடந்த வாரம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், பேமிலி ஆடியன்சுக்கும் படம் பிடித்துவிட்டதால், தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். கோடியில் வசூலை குவித்து வரும் ஜெயிலர் படத்தில் நெல்சன் சில காட்சிகளில் எதையும் அழுத்தமாக சொல்லாமல் கோட்டைவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
முதல் சொதப்பல்: ஜெயிலர் படத்தில் இடைவேளைக்காட்சி தான் சும்மா மிரட்டலாக இருக்கும். அந்த காட்சியில் தான் மனைவி ரம்யாகிருஷ்ணனுக்கே தனது கணவர் எப்படிப்பட்டவர் என்று தெரிகிறது. கூடவே வாழ்ந்த மனைவிக்கு கணவர் பற்றி எதுவுமே தெரியாது என்று சொன்னால், பச்சக்குழந்தைக்கூட நம்பாது, இருந்தாலும், தியேட்டரில் இருந்த அத்தனை பேரும் அதை நம்பி கைத்தட்டி ரசித்தார்கள்.

அழுத்தமாக சொல்லவில்லை: கணவரின் பலம் என்ன என்று மனைவிக்கு தெரியாது, ஆனால், அப்பா யாரு, அப்பா எப்படிப்பட்டவர் என்பதை மகன் தெரிந்து வைத்துக்கொண்டு, பக்காவாக ஒரு பிளான் போட்டு கிரீடத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார். மேலும், ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி தவறான பாதைக்கு போக காரணம் என்ன என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
வழக்கமான பில்டப்: அதே போல,எத்தனை வில்லன்கள் வந்தாலும், ரஜினியை ஒன்றுமே செய்ய முடியாது என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. எமோசனல் பிளாக்மெயிலும் அவ்வளவு சிறப்பாக அமைக்கப்படவில்லை. வழக்கமான ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பில்டப்பை வைத்தே படத்தை முடித்துவிட்டார். எது எப்படியோ படத்தை திரையில் பார்க்கும் போது, அனிருத்தின் இசைக்கும், ரஜினியின் ஸ்டைலுக்கும் விசில் பறக்கிறது.


Click it and Unblock the Notifications











