twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏமிரா இதி.. அந்த பழைய சிலைய ரெஃபரன்ஸா வச்சு மேக்கப் பண்ணிருப்பாங்க போல! #Thalaivi

    |

    சென்னை: தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகும் படம் தலைவி. ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை கூறும் இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், நடிகர் அரவிந்த் சாமி எம்ஜிஆராகவும் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் போஸ்டரில் இருப்பவருக்கும் ஜெயலலிதாவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என தெரிவித்து வருகின்றனர்.

    கண்டனங்கள்

    கண்டனங்கள்

    மேலும் பலர் ஜெயலலிதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு காரியம் செய்ததற்கு மான நஷ்ட வழக்கு போட்டு உள்ளே தூக்கி வைத்திருப்பார் என கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    ஏமிரா இதி..

    கண்டுபிடிச்சிட்டேன்!! அந்த பழைய சிலைய ரெபரன்ஸா வச்சி மேக்கப் பண்ணிருப்பானுக போல... ஏமிரா இதி.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

    இப்படி செஞ்சதில்லை

    ஜெயலலிதாவை வச்சு செஞ்சிருக்காங்க.... திமுக கூட இப்படி செஞ்சதில்லை.. என்று கூறுகிறார் இவர்.

    பொம்மை போஸ்டர்

    என்ன இது அனிமேஷன் படமா பொம்மை போஸ்டர் போட்டு இருக்கானுக.. இந்த போஸ்டர் பார்த்த கங்கனா ரனாவத் மாதிரியும் இல்ல ஜெயலலிதா மாதிரியும் இல்ல என்று கூறுகிறார் இவர்.

    மான நஷ்ட வழக்கு

    தலைவி மட்டும் உயிரோட இருந்து இருந்தால் அவதூறு அல்லது மான நஷ்ட வழக்கு போட்டு உங்களை எல்லாம் உள்ள தூக்கி போட்டு இருப்பார்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    சக்கர வியாதி..

    என்னடா இது சக்கர வியாதி வந்தவங்க போல இருக்காங்க...!!! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    என்னமா ஆச்சு..

    நிஜமாவே செட் ப்ராப்பர்ட்டி போல இருக்காங்க அம்மா, என்னமா ஆச்சு உங்களுக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens trolls Thalaivi first look poster. Jayalalitha Biopic Thalaivi's fisrtlook poster released today by GV Prakash.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X