வாண்ட்டடா வந்து சிக்கின அபிஷேக் ராஜா... கமலை கேள்வியால் வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இரண்டு நாட்களுக்கு முன் துவங்கிடுச்சு. இதுவரை எந்த சீசன்களிலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 18 போட்டியாளர்கள் தற்போதைய சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். அதிகமாக பிரபலமாகாத பல முகங்கள் இருப்பதால், இவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாக துவங்கியதில் இருந்து அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு, இவருமா பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறாரு என கேட்கப்பட்டவர் அபிஷேக் ராஜா. யூட்யூபர், விமர்சகர் என்ற அறிமுகத்தை கொண்ட இவர், பல பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமானவர். பேட்டி என்ற பெயரில் பலரையும் கலாய்த்தவர் இவர்.

அபிஷேக் கொடுத்த விளக்கம்
இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு தான் யார் என்பதை தெரிய வைப்பதற்காக தான் பிக்பாஸ் போட்டியில் கலந்த கொள்ள வந்துள்ளதாக பிக்பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன் கமலிடம் சொன்னார் அபிஷேக் ராஜா.

வீட்டிற்குள் அமைதி
யூட்யூப் வீடியோக்களில் அதிகம் பேசுவாரே, அதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் போன பிறகும் அதிகம் பேசுவாரோ என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது முதல் ராஜு ஜெயமோகன் தான் பேசிக் கொண்டிருக்கிறோரே தவிர, அபிஷேக் இருக்குற இடமே தெரியவில்லை. அதிகம் பேசவும் இல்லை. என்ன இவர், எதுவுமே பேசமாட்டாரா, வீடியோவுல தான் பேசுவாரா என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.

முடியலடா சாமி
இந்நிலையில் காலேஜ் விழா ஒன்றில் மேடையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அபிஷேக் பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி, கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவில் அபிஷேக் பேசுகையில், நானெல்லாம் கண்ணால் பார்ப்பதை கூட நம்ப மாட்டேன். ஊருக்கே தெரியும் உங்கள கேமிராக்கள் படம்பிடிக்குது என்று. ஆனால் கிடைக்கிற 100 நாட்களில் தமிழ்நாடு சிஎம் ஆகுறதுக்காக நீங்க பண்றது இருக்கே...முடியலடா என பேசி உள்ளார்.
Recommended Video

கமல் சார் கொஞ்சம் கவனிங்க
இந்த வீடியோவை சுட்டிக்காட்டி, கமல் சார் இவரக் கொஞ்சம் என்னன்னு பாருங்க. அன்னிக்கு பிக்பாசை இப்படி கலாய்த்த இவர், இன்று போட்டியாளராக உள்ளே போயிருக்காரே என பல விதங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பிறகு கமல் என்ன செய்வார் என கமலிடம் பல விதங்களில் கேள்விகளை எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

உசுப்பேற்றும் நெட்டிசன்கள்
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை என மேலும் சிலர் கலாய்த்து வருகின்றனர். அன்னிக்கு இப்படி பேசின நீ, எதுக்காக இப்ப பிக்பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்க என கேட்டுள்ளனர். இவன சும்மா விடாதீங்க என பலர் நெட்டிசன்களை இன்னும் உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











