இந்த அசிங்கம் உனக்கு தேவையா... வடிவேலு ஸ்டைலில் அபிஷேக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 வது நாளை நெருங்கி உள்ளது. கமல் தொகுத்து வழங்கி வரம் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 6 பேர் வெளியேற்றப்பட்டு, 12 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, வைல்கார்டு என்ட்ரியாக 47 வது நாளில் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.

3 டஃப் போட்டியாளர்கள்
ஏழாவது வாரத்தின் இறுதி நாள் எபிசோடின் முதல் நாளில் நேற்று, வழக்கம் போல் வீட்டில் நடந்த பிரச்சனைகள், டாஸ்க் பற்றி கமல் பேசினார். நிகழ்ச்சி 50 வது நாளை நெருங்குவதால் பார்வையாளர்களிடம் இந்த சீசன் எப்படி இருக்கு என கேட்டார். அதற்கு பார்வையாளர்களும் சிபி, ராஜு, வருண் ஆகியோரை டஃப் போட்டியாளர்கள் என்றனர்.

நாமினேஷனில் 9 பேர்
இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகி உள்ள நிலையில் பாவ்னியை மட்டும் நேற்று காப்பாற்றினார் கமல். மீதமுள்ள 8 பேர் இன்று வெளியேற போகிறவர் யார் என்பதை அறிவிக்க உள்ளார். இதுவரை கிடைத்த தகவல்களின்படி இசைவாணி வெளியேறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாச்சியை கேள்வி கேட்கும் இசைவாணி
இந்நிலையில் நிகழ்ச்சியின் 49 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில், இசைவாணியின் கண்ணாடியாக மாறி அவரை பற்றி சொல்லச் சொல்லி இமான் அண்ணாச்சியிடம் கேட்டார் கமல். ஆனால் அண்ணாச்சி சொல்வதை ஏற்க மறுக்கிறார் இசைவாணி.

நான் பேசணுமா வேணாமா
இரண்டாவது ப்ரோமோவில் கை ஓங்கி இருக்கும், சான்சே இல்லை என இரண்டு பரிசுகளை வழங்க சொன்னார் கமல். இதில் தாமரை, ராஜு கொடுத்த பரிசினை ஏற்க மறுக்காமல், இந்த வீட்டில் நான் பேசவா வேண்டாமா என கமலிடமே கேட்கிறார் தாமரை. அதற்கு கமல் பேசலாம். ஆனால் என்னவாய் பேச வேண்டும் என்பது முக்கியம் என நக்கல் அடிக்கிறார் கமல்.

அபிஷேக்கை கலாய்த்த கமல்
மூன்றாவது ப்ரோமோவில் அபிஷேக்கை கூப்பிட்டு இன்று யார் முதலில் காப்பாற்றப்பட போகிறார் என கெஸ் பண்ணுங்க என்கிறார். அதற்கு அபிஷேக், தாமரையின் பெயரை கூறுகிறார். ஆனால் பின்னிட்டிங்க என அவரை கலாய்த்து, சிபி காப்பாற்றப்படுகிறார் என்கிறார் கமல். மீண்டும் அடுத்து யார் காப்பாற்றப்படுகிறார் என அபிஷேக்கிடம் கேட்கிறார் கமல். மீண்டும் தாமரை என்கிற அபிஷேக்கிடம் தவறு என கூறுகிறார் கமல்.

இந்த அசிங்கம் தேவையா
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள், அபிஷேக் உனக்கு இந்த அசிங்கம் தேவையா. அபிஷேக்கை செய்தது போதவில்லை என மீண்டும் கூட்டி வந்திருக்கிறார் போல பிக்பாஸ். அபிஷேக் என பல்ப் வாங்கிட்டியா. மூஞ்சி செத்து போச்சு என நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

சைலன்டான அபிஷேக்
திரும்பி வந்த பிறகு அபிஷேக் ரொம்ப சைலன்டாக இருக்காரே. பிரியங்காவை கூட போங்க, வாங்க என மரியாதையாக பேசுகிறாரே. வெளிய யாருக்கு அதிக ஓட்டுக்கள் எல்லாம் பார்த்துட்டு தான வந்திருக்கீங்க அபிஷேக். இன்னும் நீங்க திருந்தலியா. டிராமா போட்டு கடுப்பேத்துற இந்த அபிஷேக்கை முதலில் எவிக்ட் பண்ணி வெளிய அனுப்புங்க பிக்பாஸ் என அபிஷேக்கை வச்சு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











