இதுக்கே வாய பொளக்றீங்க.. அப்போ அதை என்ன சொல்வீங்க? மனோ பாலாவிடம் வரிந்துக்கட்டிய நெட்டிசன்ஸ்!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்து பிரமித்த நடிகர் மனோபாலாவை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

தமிழக சட்டசபையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை இழக்கிறது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 92868 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அப்பாடி.. சாதாரண விஷயமல்ல

இதனை நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது, 92868 /- அப்பாடி..சாதாரண விஷயமல்ல..#எடப்பாடியார்.. என குறிப்பிட்டிருந்தார்.

வாயை பொளக்கிறீங்க..

மனோ பாலாவின் இந்த ட்வீ ட்டை பார்த்த நெட்டிசன்கள், இதுக்கே வாயை பொளக்கிறீங்க... அப்போ விஜய் வசந்த் பெற்றுள்ள ஓட்டு வித்தியாசத்தை பாருங்க என வரிந்து கட்டியுள்ளனர்.

வாயை பொளக்கிறீங்க..

மனோ பாலாவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், இதுக்கே வாயை பொளக்கிறீங்க... அப்போ விஜய் வசந்த் பெற்றுள்ள ஓட்டு வித்தியாசத்தை பாருங்க என வரிந்து கட்டியுள்ளனர்.

அப்படின்னா என்ன தெரியுமா?

இந்த நெட்டிசனின் இப்பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், அது எம்பி தேர்தல் நண்பா.. அப்படியென்றால் எத்தனை எம்எல்ஏ சீட் என்று உனக்கு தெரியுமா? என கேட்டும் வரிந்து கட்டியுள்ளார்.

இவ்ளோ தூரம் வந்தது..

இந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், பரவாயில்ல இவ்ளோ பெரிய வித்தியாசத்துல வெற்றி பெற்றது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய வெற்றி. ஆனால் முதல்வராக மிஸ் பண்ணிட்டோம்.. ஜெயலலிதா அம்மா இல்லாம இவ்ளோ தூரம் வந்தது பெரிய விஷயம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: mano bala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X