புரட்டிப்போட்ட புயல்.. பாதிப்புகளுக்கு நடுவில் ஆட்டம் போட்ட நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
மும்பை: டவ்-தே புயலால் சாய்ந்த மரங்களுக்கு நடுவே பிரபல நடிகை ஆட்டம் போட்டு போட்டோ ஷுட் நடத்தியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
லட்சத்தீவுகள் அருகே அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் திங்கள்கிழமை கரையை கடந்தது.
டவ்-தே புயலானது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேறோடு சாய்ந்த மரங்கள்
புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன. டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன.

புயலுக்கு நடுவில் போட்டோ ஷூட்
இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தி டிவி நடிகையான தீபிகா சிங், டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
நெட்டிசன்கள் கண்டனம்
மேலும் கொட்டும் மழையில் நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடும் விமர்சனம்
புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என்று நடிகை தீபிகா சிங் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். புயலால் பலத்தை சேதத்தையும் பெரும் இழப்பையும் சந்தித்துள்ள நிலையில் நடிகை தீபிகா சிங்கின் இந்த பொறுப்பில்லாத செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

வெட்கப்பட வேண்டிய விஷயம்
புயலால் மக்கள் இறந்திருக்கிறார்கள், நீங்கள் கொண்டாடுகிறீர்களா.. வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் பலர் வீடுகளை இழந்துள்ள இந்த நேரத்தில் இது தேவையா? உங்களுக்கு இதயமே இல்லையா என்று கேட்டும் விளாசியுள்ளனர்.

மரங்களை அப்புறப்படுத்த
மேலும் முகக்கவசம் அணியாமல் ஆபத்தை உணராமல் சாலையில் நடனமாடியிருப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று சாடியுள்ளனர். ஆனால் டவ் தே புயலால் தனது வீட்டிற்கு வெளியே மரம் விழுந்ததாகவும், அதனை தானும் தனது கணவரும் அப்புறப்படுத்த முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
மேலும் அப்போது டவ்தே புயல் நினைவாக சில போட்டோக்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார் தீபிகா சிங். ஆனால் அவரது டான்ஸ் வீடியோவையும் கிளாமர் போட்டோ ஷூட்டையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications