8000 கோடி மக்களுக்கு 5000 கோடி பணமா.. அடித்து விட்ட மதுவந்தி.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மதுவந்தி பிரதமர் மோடிக்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

8000 கோடி மக்களுக்கு 5000 கோடி பணமா.. அடித்து விட்ட மதுவந்தி.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! - வீடியோ

மூத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி. மதுவந்தி தர்மதுரை, கடம்பன், ஷிவலிங்கா, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சன்டிவியில் 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் நடித்திருக்கிறார் மதுவந்தி. அதுமட்டுமின்றி தனது தந்தையின் மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

 சர்ச்சைகளில் சிக்கி

சர்ச்சைகளில் சிக்கி

மேலும் பள்ளி நிர்வாகி, நடன கலைஞர் என பல முகங்களை கொண்டவராக வலம் வருகிறார் மதுவந்தி. கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அதிகம் இடம் பிடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.

 தீபம் ஏற்ற கோரிக்கை

தீபம் ஏற்ற கோரிக்கை

கடந்த ஞாயிற்றுக் கிழமை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேசத்தின் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றவேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

 9 கிரகங்கள்

9 கிரகங்கள்

இதற்காக ஆதரவாக பேசிய மதுவந்தி, 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை ஏற்றும்போது 9 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக வானியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதன் மூலம் கொரோனாவின் சக்தி குறையும் என அள்ளிவிட்டார். அதனைக் கேட்ட நெட்டிசன்கள் அப்போதே அவரை வறுத்தெடுக்க தொடங்கினர்.

 5000 கோடி பணம்

5000 கோடி பணம்

இந்நிலையில் மதுவந்தியின் மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா' திட்டத்தின் கீழ் மோடி செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் மதுவந்தி. தான் சொல்லும் தகவல்களுக்கு ஆதாரமாக பிரபல நாளிதழையும் சுட்டிக்காட்டுகிறார்.

 62 பைசாதான் வரும்

62 பைசாதான் வரும்

மதுவந்தியின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர். இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி தான். உலகம் முழுக்க மக்கள் தொகையை கூட்டினால் கூட 8,000 கோடி வராது. மதுவந்தி சொல்வது போல் 8000 கோடி பேருக்கு 5000 கோடி என்றால் ஒரு ஆளுக்கு 62 பைசாதான் வரும், முழுதாய் ஒரு ரூபாய் கூட வராது.

 பெண்களின் வங்கிக்கணக்கு

பெண்களின் வங்கிக்கணக்கு

மேலும் தனது வீடியோவில் 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி என்கிறார். அனைத்தும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பெருமையுடன் கூறியிருக்கிறார். மதுவந்தியின் பேச்சை கேட்டு கடுப்பான சில நெட்டிசன்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதீர்கள் என இது ஒரு மனநோய் விரைவாக வைத்தியம் பாருங்கள் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கமுக்கமாவா நிக்கிறீங்க?

மதுவந்தியின் கணக்கை கேட்ட இந்த நெட்டிசன், மதுவந்தி இந்த 62.5 பைசாவ எப்படி செலவு பண்ணிருப்பாக.. என நக்கலடித்துள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் 144 தடை உத்தரவுக்கு முன்னாடி 140 கோடி இருந்த மக்கள் தொகையை இந்த 15 நாள்ல 8000 கோடி ஆக்கி வச்சுட்டு கமுக்கமாவா நிக்கிறீங்க? என கலாய்த்துள்ளார்.

பாவம் பசங்க

எந்த அடிப்படையில் இவர்கள் எல்லாம் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள் என எனக்கு தெரியவில்லை.. ஐயோ பாவம் பசங்க. ஒன்னாம் நம்பர் சங்கீஸ் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன். 8000 கோடி பேருக்கு 5000 கோடி ரூபாயா.. சரி வாங்க வண்டியில பேசிக்கிட்டே போவோம் என மீம்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

பன்னு கூட வாங்க முடியாது

மதுவந்தியின் வீடியோவை பார்த்தேன். அவர் வீடியோவில் சொல்லும் தகவல் போலி என்பது அவருக்கே தெரியும், ஆனால் அதில் அவ்வளவு பெருமைபடுகிறார். 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாய் என்றால் ஒருத்தருக்கு 65 பைசா. இதை வைத்து காலை உணவுக்கு ஒரு பன்னு கூட வாங்க முடியாது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

புது என்டெர்டெய்ன்மென்ட்

#மதுவந்தி நீங்கள் பள்ளிக்கூடம் நடத்துவதாக சொல்கிறார்கள்.. உங்கள் பள்ளி மாணவர்களுக்காக 2நிமிட மவுனம் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
#மதுவந்தி குவாரண்டைன்ல இருக்க மக்களுக்காக வந்த புது என்டர்டெய்ன்மென்ட் என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X