இன்னிக்கு யாரு? மநீம ஸ்ரீபிரியாவின் டிவிட்டை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியா பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகிய வண்ணம் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
ஆனால் இதில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே தோல்வியை சந்தித்தார்.

காலியாகும் கூடாரம்
இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கூடாரம் காலியாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு முக்கிய பிரமுகர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். துணைத் தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்மபிரியா ஆகியோர் விலகினர்.

தொடரும் விலகல்
அவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்த எம் முருகானந்தம் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகுவதாக அறிவித்தார்.

கமல் மீது அதிருப்தி
கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கமலின் தன்னிச்சையான முடிவுகளும் சர்வாதிகார போக்குமே தோல்விக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நன்றி மறப்பது நன்றன்று
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை ஸ்ரீபிரியா பதிவிட்டுள்ள டிவிட் நெட்சன்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, நடிகை ஸ்ரீபிரியா, நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று... என பதிவிட்டுள்ளார்.

அடுத்து நீங்கள் தானா?
ஸ்ரீபிரியாவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அடுத்து யார் ஓட்டம் பிடிக்கப் போகிறார்கள் என்றும், நீங்கள் தான் கிளம்ப போகிறீர்களா என்றும் கேட்டு பங்கம் செய்து வருகின்றனர். ஸ்ரீபிரியாவின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்து அத்தை கிளம்ப போகுது போல அதான் சிம்பாளிக்கா சொல்லுது என கமெண்ட் அடித்துள்ளார்.

ஸ்டேட்மென்ட் யாருக்காக?
ஸ்ரீபிரியாவின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா வரவேண்டிய நடிகர்-அவரை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று பாலச்சந்தரிடம் சொன்ன ஒரே நடிகை நீங்கதான். (இதை பாலசந்தர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்) ஸ்ரீப்ரியா என்ற பெயரை பார்த்தாலே எனக்கு இதுதான் ஞாபகம் வரும். ஆமாம் நீங்க சொன்ன ஸ்டேட்மென்ட் யாருக்காக? என கேட்டுள்ளார்.
Recommended Video

இன்னும் மீதி இருப்பது..
மற்றொரு நெட்டிசனான இவர் அடுத்த விக்கெட்டும் காலியா இன்னும் மீதி இருப்பது கோவை சரளாவும் கமலும் தான் ரெண்டு பேரும் கட்சி ஆபிசுக்கு போய் சதிலீலாவதி படம் பார்க்க வேண்டியதுதான் என கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











