அண்ணனுக்கு ஒரு வனிதா அக்கா பார்சல்... வனிதா ஷேர் செய்த வேற லெவல் மீம்ஸ்.. பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: வனிதா ஷேர் செய்துள்ள மீம்ஸை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக்கியுள்ளனர்.
Recommended Video
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். மூன்று திருமணம் செய்தும் விவாகரத்தில் முடிந்ததால் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிங்கிள் மதராக வசித்து வருகிறார்.
தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வனிதா, சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா பெரும் பிரபலமானார்.

குக் வித் கோமாளி - டைட்டில் வின்னர்
தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா, இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆனார். இதனை தொடர்ந்து கலக்கப்போது யார் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் வனிதா.

பிக்பாஸ் ஜோடிகள் - வனிதா மோதல்
இதில் நடுவராக பங்கேற்றார் வனிதா. தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக நடனமாடினார் வனிதா. ஆனால் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பதில் சொல்ல மறுத்த ரம்யா கிருஷ்ணன்
அதோடு ரம்யா கிருஷ்ணன் தன்னை பார்த்து பொறாமை படுவதாகவும் நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால் இதுகுறித்து பேச மறுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் நோ கமெண்ட்ஸ் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

சேற்றில் விழ விரும்பவில்லை
அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய நடிகர் நகுல், நடிகை வனிதா செட்டில் தன்னையும் ரம்யா கிருஷ்ணனையும் அசிங்கமான வார்த்தையை சொல்லி பேசியதாகவும், அம்மன் வேஷம் போட்டுக்கொண்டு யாரும் இப்படி பேச மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும் சேற்றில் விழ விரும்பவில்லை என்று கூறிய நகுல், தான் பேசியதற்காக வனிதா ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

வேலையில்லாத முட்டாள்களின் உளறல்
இந்தப் படத்தின் மூலம் வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் அறிமுகமாகிறார் வனிதா விஜயகுமார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா 4 கல்யாணம் இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன், அது என் இஷ்டம் என்று கூறினார். வனிதாவின் இந்த பேச்சு வைரலானது. ஏற்கனவே வனிதாவுக்கு வட நாட்டு பைலட்டுடன் 4வது திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

வனிதா கைவசம் 8 படங்கள்
அனல்காற்று, 2கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.
மேலும் வசந்த பாலனின் படத்திலும் நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பவர் ஸ்டாருக்கு ஜோடி வனிதா
பிக்கப் ட்ராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் இணைந்து வனிதா விஜயகுமார் போட்டோ ஷூட் நடத்தினார். திருமண கோலத்தில் இருந்த போட்டோக்கள் வைரலானது. அதனை தொடர்ந்து மாடர்ன் டிரெஸில் பவர் ஸ்டாருடன் பைக்கில் ரெய்டு போவது போன்ற போட்டோக்களும் இணையத்தில் வைரலானது.

வைரல் ஸ்டாராக அறிமுகமாகும் வனிதா
இந்தப் படத்தின் மூலம் வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் அறிமுகமாகிறா வனிதா விஜயகுமார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா 4 கல்யாணம் இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன், அது என் இஷ்டம் என்று கூறினார். வனிதாவின் இந்த பேச்சு வைரலானது. ஏற்கனவே வனிதாவுக்கு வட நாட்டு பைலட்டுடன் 4வது திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இன்னும் சிங்கிள் அன்ட் அவைலப்பிள்
ஆனால் அதனை மறுத்த வனிதா, இன்னும் சிங்கிள் மற்றும் அவைலப்பிள் தான் என்றார். வனிதாவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளினர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வனிதா, தொடர்ந்து தனது போட்டோக்களையும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

சமையல் தெரிஞ்ச சப்பியா ஒரு பொண்ணு
இந்நிலையில் நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் சில மீம்ஸ்களை ஷேர் செய்துள்ளார். அதாவது வடிவேலு நடித்த ஹோட்டல் காமெடி இமேஜ்களை பயன்படுத்தி இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வடிவேலு குண்டாவும் இல்லாம ஒல்லியாவும் இல்லாம, நல்லா மூக்கும் முழியுமா, சமையல் தெரிஞ்ச சப்பியா ஒரு பொண்ணு வேணும் என கேட்கிறார்.

அண்ணனுக்கு ஒரு வனிதா
அதற்கு ஆர்டர் எடுக்கும் நபர் அண்ணனுக்கு ஒரு வனிதா என கூறுகிறார். இந்த மீம்ஸை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் மீம் என்றும் வேற லெவல் எடிட்டர் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அல்டிமேட் என்றும் புகழ்ந்துள்ளனர்.

மீம் பேஜ் என்று நினைத்தேன்
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இது மீம் பேஜ் என்று நினைத்ததாக கூறியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு ஓபன் மைண்டட், மரியாதைக்குரியவர் ஸ்ட்ரைட் ஃபார்வர்டு பெண்ணாக இருந்து கொண்டு இதுபோன்ற மீம்ஸை எல்லாம் ஷேர் செய்து உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளாதீர்கள், இது ரொம்பவே வலிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

நீங்கள் ரொம்ப ஜோவியல்
சிலர் அதான் வனிதா இருக்கே அப்புறமென்ன என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வேறு யாரோதான் இந்த மீமை ஷேர் செய்துள்ளார்கள் என்று நினைத்தோம்.. நீங்களே ஷேர் செய்துள்ளீர்கள்.. நீங்கள் ரொம்ப ஜோவியல் என்றும் பதிவிட்டு வருகின்றனர். வனிதா ஷேர் செய்துள்ள இந்த மீம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











