For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முடிஞ்சு போன கல்யாணத்துக்கு நல்லா மேளம் அடிக்கிறீங்க.. முதல் புரமோவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

  பிக் பாஸ் புரமோ எப்படா வரும், அதை கழுவி ஊற்றலாம் என்றே அதுக்காகவே ஒரு ரசிகர் கூட்டம் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

  எவிக்‌ஷன் பற்றிய முதல் புரமோவை பார்த்து விட்டு, முடிஞ்சு போன கல்யாணத்துக்கு நல்லா மேளம் அடிக்கிறீங்க என பங்கம் பண்ணும் சில நெட்டிசன்களின் ட்ரோல்களை பார்க்கலாம்.

  சூப்பர் ஆண்டவரே

  "ஆரி, பயில்வான் நீங்க ரெண்டு பேரும் நல்லா அடிச்சிகோங்க!... அப்பதான் நீங்க காப்பாற்றபடுவீர்கள்!. சூப்பரு ஆண்டவரே!" என கமல் நேற்று இருவரையும் சேவ் பண்ணதை கிண்டல் அடித்துள்ளார் இந்த பிக் பாஸ் ரசிகர். மேலும், அந்த என்ட்ரி கொடுக்கபோகும் போது நீங்க பேசுற வீரவசனம் ரொம்ப நல்லாயிருக்கு!... ஆனா நிகழ்ச்சி நடத்தும்போது காற்றுபோன பலூனாய் ஆகிடுறீங்க என கமலையும் கலாய்த்துள்ளார்.

  சைலன்ட் கில்லர்

  ரம்யா பாண்டியனுக்கு ஜித்தன் ரமேஷ் சைலன்ட் கில்லர் என சரியாகத்தான் பெயர் வைத்தார். சனிக்கிழமை எபிசோடு அப்படி களேபரமாக இருக்கும் போது, சத்தமே காட்டாமல், நல்லா ஜாலியா சிரிச்சிக்கிட்டே மத்தவங்க சண்டை போடுறதை சைலன்ட்டா இருந்து பார்த்த ரம்யா பாண்டியனையும் விடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.

  ஒரே ஆறுதல்

  எங்களுக்கு ஒரே ஆறுதல் சொம்புயுக்தா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது தான் என சம்யுக்தா எலிமினேஷன் குறித்தும் ஏகப்பட்ட ரசிகர்கள் புரமோவுக்கு கீழ் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். இதுக்கு மேல, அதுல வேற சஸ்பென்ஸ் எல்லாம் வச்சி கமல் பேசுவாரே, அதை எல்லாம் கேட்கணுமா என்றும் கலாய்க்கின்றனர்.

  நன்றிகள் பல கோடி

  "தாங்க்யூ கமல் சார், சம்யுக்தாவிற்கு இரண்டு குறும்படம் போட்டு எக்ஸ்போஸ் பண்ணி வெளியே அனுப்பி வைத்ததுக்கும், அந்த குறும்படங்கள் மூலம் ஆரியின் நேர்மையை ஹவுஸ் மேட்சிற்கு உணர்தியமைக்கும் நன்றிகள் பல கோடி" என இந்த பிக் பாஸ் ரசிகை கமெண்ட் அடித்துள்ளார்.

  நிஷாவுக்கு நோஸ் கட்

  "நீங்க ரியோ தான் வின் பண்ணனும்னு நினைச்சா.. அதை வெளியே ஆடியன்ஸா இருந்து பண்ணலாமே நிஷா என கமல் சார் நிஷாவுக்கு நோஸ் கட் கொடுத்தார். பிக் பாஸ் வாய்ப்பு வேறு ஒரு திறமையானவருக்கு கிடைத்திருக்குமே என கூடுதல் பிட்டையும் போட்டு மாட்டிக் கொண்டார். ஆளே கிடைக்கலைன்னு தானே பூரா விஜய் டிவி புராடக்ட்ஸா இறக்கி இருக்காங்க..

  பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

  கெட்ட வார்த்தையா ஆக்கிட்டீங்களே

  அன்பே சிவம் என படம் எடுத்த கமலுக்கே ஏகப்பட்ட அன்புகளை அறிமுகப்படுத்தி, பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில், அன்பு என்கிற வார்த்தையையே ஒரு கெட்ட வார்த்தையா ஆக்கிட்டீங்களேடா என இந்த நெட்டிசன் அன்பே சிவம் மாதவன் ரியாக்‌ஷனை போட்டு வெறுப்பேற்றி உள்ளார்.

  முடிஞ்சி போன கல்யாணத்துக்கு

  இரண்டாம் வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா முதல், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா என அனைவரது எலிமினேஷன் ரகசியமும் வழக்கம் போல கசிந்து விடுகிறது. இதில், நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் பார்க்கும் ஆடியன்ஸை வேற ஆஃப் பண்றது செம காமெடி. இந்நிலையில், முடிஞ்சி போன கல்யாணத்துக்கு மேளம், கச்சேரி வாசிக்காதீங்க தலைவா என பங்கமாக முதல் புரமோவை கலாய்த்துள்ளனர்.

  English summary
  Netizens trolls after watching Bigg Boss Tamil 4 Day 56 promo 1. They all very well know about today Samyuktha eliminated from BB house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X