GBU: எப்பா... முடியல.. மொத்தம் இத்தனை முறை AK சொல்றாங்களா? லிஸ்ட் போட்டு கலாய்க்கும் இணைய வாசிகள்!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது, தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், படத்தை இணையவாசிகள் ஒருபுறம் கலாய்த்து வருகிறார்கள்.

Netizens Trolls Ajithkumar Good Bad Ugly Movie Has AK dialogue More Than 70 Times - Watch

அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வி படமாக அமைந்தது. ஆனாலும் குறிப்பிட்ட ஆடியன்ஸுக்கு இந்த படம் ஹாலிவுட் ஃபீலிங் கொடுத்தது. படம் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியதால், குட் பேட் அக்லி படத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இப்படியான நிலையில்தான், குட் பேட் அக்லி படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

Netizens Trolls Ajithkumar Good Bad Ugly Movie Has AK dialogue More Than 70 Times - Watch

GBU: ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட டீசர், டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்தது. படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 31.9 கோடிகளை வசூல் செய்தது. படம் இதுவரை ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிட்டது. படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் படத்தின் முதல் காட்சியில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை தரமான இசையை வழங்க மெனக்கெட்டு உள்ளார். குறிப்பாக அஜித்திற்கு படம் முழுவதும் பல ஓபனிங் காட்சிகள் இருப்பதால் அனைத்து காட்சிகளுக்கும் மிரட்டலான இசையை கொடுத்துள்ளார். அதேபோல், அர்ஜுன் தாஸ்க்கு அவர் கொடுத்த பின்னணி இசையும் சிறப்பு.

Netizens Trolls Ajithkumar Good Bad Ugly Movie Has AK dialogue More Than 70 Times - Watch

விமர்சனம்: இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த படத்தில் என்னதான் கதை இருக்கு? திரைக்கதை என்ன இருக்கு? படத்தில் எங்கதான் லாஜிக் இருக்கு? என்ற பல கேள்விகளை இணையவாசிகள் வைத்து வந்தார்கள். குறிப்பாக இது அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் கொண்டாடிக் கொள்ளலாமே தவிர படம் அனைவருக்குமான படமாக இல்லை எனக் கூறி படத்தை விமர்சித்தார்கள்.

Netizens Trolls Ajithkumar Good Bad Ugly Movie Has AK dialogue More Than 70 Times - Watch

AK : இப்படியான நிலையில் படத்தில் மொத்தம் எத்தனை முறை AK எனக் கூறுகிறார்கள் என்பதை பட்டியலிட்டு கலாய்த்து வருகிறார்கள். அதாவது படத்தின் முதல் காட்சியில், மகாநதி சங்கர் கூறுவதில் இருந்து, கிளைமேக்ஸில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் AK என கத்துவது வரை என படத்தில் மொத்தம் 70 முறை AK வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை இணைய வாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த மற்ற இணையவாசிகள், எப்பா முடியல.. எத்தனை முறை? என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

குட் பேட் அக்லி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து, தேங்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் சில் தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குறித்து மிகவும் எமோஷனலாக பேசினார்.

அவர் பேசும்போது, " 7 வது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான் ( தன்னைச் சொல்கிறார்). நான் அஜித் சார் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன் என நினைக்கிறேன். அஜித் சாரின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.

நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா கெரியர் இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படமான த்ரிஷா இல்லையினா நயன்தாரா மட்டுமே ஹிட் ஆனது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் அனைவரையும் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை பெரிய கேள்வியாக உள்ளது.

நம்பிக்கை: படப்பிடிப்புத் தளத்தில் கூட அஜித் சாரிடம் கேட்டேன், ' எதை வைத்து சார் நீங்கள் போனி கபூர் சாரிடம் நான் பெரிய இயக்குநராக வருவேன்' எனக் கூறினீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் எதுவும் கூறாமல், சிரித்துக் கொண்டு போய் விட்டார். இந்த தருணத்தில் நான் சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அஜித் சார் என்னை நம்பிய அளவுக்கு அவரும் என்னை நம்பினார். இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது மிகவும் எமோஷ்னலாகிவிட்டேன். அப்படியான ரசிகர்கள் கூட்டத்திற்குள் இருந்தவன்தான் நான்.

அஜித்: அங்கு இருந்த என்னை இங்கு உங்கள் முன் நிறுத்தி அழகு பார்க்க வைத்த அஜித் சாருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அஜித் சார் தன்னை எப்போது பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை ஒரு நடிகராக மட்டுமே கருதுகிறார். குட் பேட் அக்லி படம் இந்த அளவிற்கு எனர்ஜியாக இருக்க முக்கிய காரணமே அஜித் சார்தான். அவரது மொத்த எனர்ஜியும் குட் பேட் அக்லி தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் சார் தான். படத்தின் டைட்டிலை முடிவு செய்ததில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸ்க்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துவிட்டு ரேஸ்க்குச் சென்றார். ஐ லவ் யூ அஜித் சார்.

மனைவியை விட: நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன் அஜித் சார். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களை தான் அஜித் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோர்களுக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்" என எமோஷனலாக பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X