வெள்ளைக் கொடியை தூக்கிப் பிடிக்கும் ஆலியா பட்.. ஒண்ணும் வேணா ஓடிப்போ.. என வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

மும்பை: பாலிவுட் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கி வருகிறார் நடிகை ஆலியா பட்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு முன்பாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த ஆலியா பட், சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு, தூக்கி எறியப்பட்டுள்ளார்.

ஆலியா பட்டின் சடக் 2 படத்தை வெச்சு செய்த பாலிவுட் ரசிகர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் தனது அடுத்த முயற்சியை ஆலியா பட் தொடங்கி உள்ளார்.

டாப் ஹீரோயின்

டாப் ஹீரோயின்

பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா எல்லாம் கொஞ்சம் ஹாலிவுட் பக்கம் போயிட்டு வந்த நேரம், பாலிவுட்டில் அடுத்து அடுத்து பல பெரிய படங்களில் கமீட் ஆகி, யங் ஹீரோயினாக இருந்த நம்ம ஆலியா பட் டாப் ஹீரோயினாக மாறிவிட்டார். கைவசம் ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்கள் அணிவகுத்து காத்து இருக்கின்றன.

இறக்கிவிட்ட டிஸ்லைக்

இறக்கிவிட்ட டிஸ்லைக்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு எழுந்த நெப்போடிசம் பிரச்சனை மற்றும் அப்பா மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான சடக் 2 திரைப்படத்திற்கு குவிந்த டிஸ்லைக்ஸ் என கடந்த சில வருடங்களாக ஜெட் வேகத்தில் ஏறிய ஆலியா பட்டின் புகழ், பழுதடைந்த ராக்கெட் போல அதள பாதாளத்திற்கு தரை இறங்கியது.

வெள்ளைக் கொடிக்கு வேலை வந்தாச்சு

வெள்ளைக் கொடிக்கு வேலை வந்தாச்சு

வெள்ளைக் கொடியை ஏந்திக் கொண்டு சமாதான பேச்சுவார்த்தையை நடத்துவது போல வெள்ளை நிற டாப்ஸை அணிந்து கொண்டு புதிய போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை ஆலியா பட். மேலும், அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தனது ஹேட்டர்ஸை அழைக்கும் விதமாகவே உள்ளது.

டைம் இல்லை

டைம் இல்லை

ஆனால், ஆலியா பட்டின் இந்த அழகான புகைப்படத்தை பார்த்தும் பாலிவுட் ரசிகர்கள் Not Interested என்றும், உங்க அடுத்த பட ட்ரைலர் எப்போ விடுறீங்கன்னு மட்டும் சொல்லுங்க, மத்தபடி ஒண்ணும் பேச வேண்டாம். மத்தத நாங்க டிஸ்லைக் பட்டனை அடித்து நொறுக்கி கவனிச்சிக்கிறோம் என பங்கமாக கலாய்த்து வெள்ளைக் கொடியையும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

50 மில்லியனை நெருங்கும்

50 மில்லியனை நெருங்கும்

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டுக்கு இன்ஸ்டாகிராமில் 49.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 50 மில்லியனை நெருங்க உள்ள நிலையில், இப்படியொரு போஸ்ட்டை அவர் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து வெளியாகவுள்ள பிரம்மாண்ட படங்களை மனதில் வைத்துக் கொண்டு ரசிகர்களின் ஆதரவை திரட்ட முயற்சி செய்து வரும் ஆலியா பட்டின் முயற்சி வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X