அவ்ளோ நல்லவங்களா நீங்க.. இது தெரியாம போச்சே.. பிக் பாஸ் புரமோவை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் பங்கமாக அதனை ஓட்டி வருகின்றனர்.

மூன்றாவது புரமோவில் சம்யுக்தாவின் மகன் ரயானின் பிறந்தநாள் காட்சிகளை காண்பித்து இருந்தனர்.

அதில் சம்யுக்தா அழுது ஆர்ப்பாட்டம் செய்ததை பார்த்துத் தான் பிக் பாஸ் ரசிகர்கள் ஏகத்துக்கும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஏன் சண்டை போடுறீங்க

ஏன் சண்டை போடுறீங்க

"இப்படி குடும்பத்தை பார்த்த உடனே கண்ணீர் ஆறா ஓடுதே.. பின்னே ஏன் ஒருத்தருக்கு ஒருத்தர் உள்ளே சண்டை போடுறீங்க" என இந்த தீவிர பிக்பாஸ் ரசிகர்கள் வழக்கம் போல வடிவேலு போட்டோவை போட்டு கிண்டல் அடித்துள்ளார்.

மூடிட்டு உட்காருடா

மூடிட்டு உட்காருடா

இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ காலை வெளியாகி இருந்தது. அதில், ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் வழக்கு நடக்கும் போது, பாலாஜி தனது கமெண்ட்டை பாஸ் பண்ணினார். அதற்கு, ஆரி தம்பி உனக்கு ஏதாவது சொல்லணும்னா இங்கே வந்து சொல்லு என்றார். அதற்கு பாலாஜி முடியாது என சொல்லியதை புரமோவில் ஹைலைட் பண்ணினார்கள், பதிலுக்கு ஆரி, அப்போ மூடிட்டு உட்காருடா வெண்ணெய் என சொல்வது போல மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.

தப்பே இல்லை

தப்பே இல்லை

ஷிவானி சாப்பிட்ட உணவை பாலாஜிக்கு ஊட்டி விடுவதை இரண்டாவது புரமோவில் பார்த்த ரசிகர்கள், சுரேஷ் தாத்தா காரி துப்பினதுல தப்பே இல்லை என பங்கமாக கலாய்த்து போட்டுள்ள ட்வீட்டை பிக் பாஸ் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் கொடுமையை பார்க்கப் போகிறோமோ என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

நான் பொய் சொல்லலை

நான் பொய் சொல்லலை

நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி, அர்ச்சனா அக்கா இரண்டு பொய் சொன்னார்கள் என டார்கெட் பண்ணி விட்டு, பின்னர், தான் பொய் சொல்ல மாட்டேன். பொய்யே சொல்ல மாட்டேன் என கத்தி கூச்சல் போட்டு சீன் கிரியேட் பண்ணதையும் விட்டு வைக்காமல் பங்கமாக ஓட்டி வருகின்றனர். நான் பொய் சொல்லலை பிக் பாஸ்.

ரமேஷ் ரசிகர்கள்

ரமேஷ் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை நாம நம்ம வீட்டில இருந்து பார்க்கிறது மாதிரியே, ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், பெரிய பிரச்சனை ஓடும் போது, நல்லா சீன் போடுறாங்களே என்பது போல ரியாக்‌ஷன் கொடுப்பதும் என்று, ரியாக்‌ஷன் கொடுத்தே ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து விட்டார்.

அவ்ளோ நல்லவங்களா நீங்க

அவ்ளோ நல்லவங்களா நீங்க

இப்படி பத்து நாள் பார்க்காததற்கே பக்கம் பக்கமா அழறாங்களே.. அட பாவிங்களா.. அவ்ளோ நல்லவங்களா நீங்க, இது தெரியாம போயிடுச்சே என போட்டுள்ள கமெண்ட் தரமான சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். குடும்பத்தின் மேல அத்தனை அன்புடன் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ச்சிக்காக அடித்துக் கொள்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X