இவங்க நாலு பேர் தான் திரௌபதி 2 படத்தை நாசமாக்கீட்டாங்க.. மோகன் ஜி வேதனை..கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி கடந்த 23ஆம் தேதி வெளியான படம் திரௌபதி 2. அதே தேதியில் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதால், திரௌபதி 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பே கிடைக்கவில்லை. இதனால் இயக்குநர் மோகன் ஜி தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவுக்கு பின்னர் ரசிகர்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் பல தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஷோ படம் ஓடுகிறது என்றும் தெரிவித்தார்.

மோகன் ஜியே இவ்வாறு தெரிவித்த நிலையில் படம் நன்றாக பிக்-அப் ஆகி ஓடிக் கொண்டுள்ளது என்று பலரும் நினைத்தனர். ஆனால், இன்று அவர் திடீரென்று தனது எக்ஸ் பக்கத்தில் திரௌபதி 2 படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களைக் கொடுத்தவர்கள் இவர்கள் என்று, சில யூடியூப் சேனல்களில் இருந்து ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். அந்த நான்கு பேரின் புகைப்படத்தை பகிர்ந்து, திரௌபதி 2 படத்திற்கு பொய்யான தகவலைப் பரப்பிய கும்பல் இவர்கள் தான் என்று பதிவிட்டிருந்தார்.

Netizens Trolls And Slams Draupathi 2 Director Mohan G For His X Page Post And Worst Movie Making

மோகன் ஜி வேதனை: இது மட்டும் இல்லாமல், " இது சரியா??? முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் எல்லா யூடியூப் சேனல்களிலும் போலியான மற்றும் விஷமத்தனமான விமர்சனங்களைப் பரப்பி, படம் குறித்த மோசமான எண்ணத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான்.. இந்த முகங்களால்தான் எல்லா கடின உழைப்பும் வீணானது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நான்கு பேர்: இது மட்டும் இல்லாமல் நெட்டிசன்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் மோகன் ஜியின் இந்த போஸ்ட்டை பார்த்து, இந்த நாலு பேர் சேர்ந்து உங்க படத்தை நாசமாக்கீட்டாங்க என்று சொல்லுகிறீர்களே இவர்கள் நான்கு பேரும் என்ன சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வல்லமை கொண்டவர்களா? இல்லை இந்த நான்கு பேர் மட்டும் தான் படத்தையே பார்த்தார்களா? இந்த நான்கு பேர் விமர்சனத்தால் உங்கள் படம் ஓடவில்லை என்றால், அந்த அளவுக்குத்தான் உங்கள் படம் இருக்கிறதா என்று எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் கலாய்: மற்றொருவரோ, " படம் வெற்றி பெற தேவை கன்டென்ட்தான் கான்ட்ரோவர்ஸி இல்ல மோகன்,வெறும் 5 கோடி பட்ஜெட்ல எடுத்த சிறை படம் 45 கோடி வசூல் பண்ணிட்டு இருக்குது. போய் கன்டென்ட்டோட வா! அனைத்து மக்களும் கொண்டாடுற மாதிரி படம் எடு நான் 100 பேருக்கு டிக்கெட் வாங்கி கொடுக்குறேன் என்று மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார். இதில் மோகன் ஜி பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் ஒருவரோ, " இயக்குநர் மோகன் ஜி, நீங்கள் பகிர்ந்துள்ள புகைப்படக்களில் கருப்பு நிற கட்டம் போட்ட சட்டை போட்டுள்ள நபர் நான் தான். நான் படம் பார்த்து எனக்கு என்ன தோன்றியதோ அதைச் சொல்லி உள்ளேன். ஒரு படம் நன்றாக இல்லை என்று சொன்னால் அது எப்படி நெகடிவ் செட்டிங் ஆகும். காசு கொடுத்து படம் பார்த்த அப்போ எனக்கு என்ன தோனுச்சோ அதை நான் சொன்னேன். நீங்கள் உங்க எண்ணங்களை படமாக சொல்லும்போது நான் எனது கருத்தை விமர்சனமாக சொல்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X