மூஞ்சியை பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.. அசிங்கப்பட்டாள் இன்ஸ்டாகாரி.. ஷிவானி மாட்டிக்கிச்சு!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் 42 நாட்களை போட்டியாளர்கள் கடந்து விட்டனர். தற்போது வெளியான 2வது புரமோவை பார்த்த ரசிகர்கள், கமல் கிட்ட ஷிவானி நல்லா மாட்டிக்கிச்சு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

2 மில்லியனுக்கும் மேல் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ள ஷிவானி நாராயணன், பாலாவுக்கு பணிவிடை ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருப்பதை பார்த்து அவரது ஆர்மியினரே அப்செட் ஆகி உள்ளனர்.

இனிமேலாவது பாலா பக்கம் சேராமல் தனியா கேம் ஆடுங்க ஷிவானி என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எத்தனை பல்பு

எத்தனை முறை தான் பல்பு வாங்குவது.. எல்லாம் பயில்வானுக்கே வெளிச்சம் என இன்றைய பிக் பாஸ் புரமோக்களை பார்த்த பிக் பாஸ் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பாலாவுடன் கூடவே சுற்றுவதால், ஷிவானிக்கும் இதில் பெரும் பங்கு உண்டு என்றும், கேபி கூட பாலாவை சண்டை போடவும் அவர் தான் தூண்டினார் என்றும் வச்சு செய்து வருகின்றனர்.

தூங்கும் போதும் மேக்கப்

தூங்கும் போது வாயில இருந்து வந்தா அது வாணி.. 24 மணி நேரமும் மேக்கப் போட்டா அதுதான் நம்ம ஷிவானி என நிஷா பங்கமாக கலாய்த்ததை ஏகப்பட்ட ரசிகர்கள் குறிப்பிட்டு, தூங்கும் போதும் மேக்கப் போடுறதெல்லாம் ஒரு பொழப்பா என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இன்னைக்குத்தான் தீபாவளி

பிக் பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், ஷிவானிக்கு இன்னைக்குத்தான் தீபாவளி என கமல்ஹாசன், ஷிவானியை விளாச தொடங்கியது பற்றி கமெண்ட்டுகளில் ரசிகர்கள் மீம்களாக போட்டு மரண பங்கம் செய்து வருகின்றனர்.

அசிங்கப்பட்டாள் இன்ஸ்டாகாரி

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என பொல்லாதவன் படத்தில் சந்தானம் கருணாஸை பார்த்து சொல்லும் காமெடி வசனத்தை சற்றே மாற்றி, அசிங்கப்பட்டாள் இன்ஸ்டாகாரி என்றும், ஆஜீத் ஷிவானிக்கு ஊசி வெடி கொடுத்தது சரி தான் என்றும் ஏகப்பட்ட பேர் கலாய்த்து வருகின்றனர்.

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி

பாலாவை விளாசும் போது கூட தொடச்சி போட்டுட்டு போய்க்கிட்டு இருந்த பாலா, ஷிவானி பக்கம் கமலின் அம்பு திரும்பும் போது, திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி முழிக்கிறான் பாரு பயில்வான். இன்னும் பயில்வானுக்கு ஆர்மி என சுத்திட்டு திரியாதீங்க என்றும் பயில்வான் ரசிகர்களையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர்.

இஞ்சி தின்ன குரங்கு

சம்மந்தபட்டவங்களே அதை சொல்லிட்டா நல்லா இருக்கும் என கமல் சாட்டையை சுழற்றும் போது, ஷிவானிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் முழிக்கும் ரியாக்‌ஷனை பார்த்த ரசிகர்கள், மூஞ்சியை பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி என வேற லெவலில் வெளுத்து வாங்கி வருகின்றனர். பார்க்கலாம் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகுதுன்னு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X