வரம் கொடுத்த தலையிலேயே கைய வச்ச கதையா? கமலை விமர்சித்த அனிதா.. கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஒரு சைடாக நடந்து கொள்கிறார் என்று விமர்சித்த அனிதா சம்பத்தை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பேசியதையே மீண்டும் பேச முயன்றார் அனிதா சம்பத். ஆனால் இதை ஏற்கனவே சொல்லி விட்டீர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்தார் கமல்.
இதனால் கடுப்பான அனிதா சம்பத் கமல் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். என்னை பேசவே விடவில்லை. முதல் வாரத்தில் இருந்தே இப்படிதான் செய்கிறார் என சனம் ஷெட்டியிடம் குற்றம் சாட்டினார்.

ட்ரெண்டாகும் அனிதா
இதனை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகி விட்டனர். கடைசியில் தனக்கு ஸ்பேஸ் கொடுக்கவில்லை என அனிதா சம்பத் கமல் மீதே குற்றம்சாட்ட தொடங்கிவிட்டார் என விளாசி வருகின்றனர். இதனால் இரவு முதலே சமூக வலைதளங்களில் #AnithaSampath என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கோவில் கட்ட வேண்டும்
பலரும் அனிதா சம்பத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். ஜூலி கூட கமல் சாரை பற்றி குற்றம் சொல்லவில்லை. ஆனால் கமல் சாரையே விமர்சித்து விட்டு வேற லெவலுக்கு போய்விட்டீர்கள், என கடுமையாக சாடி வருகின்றனர். மேலும் அனிதாவின் கணவருக்கு கோவில் தான் கட்ட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

எப்படி சமாளிப்பேன்
அனிதா சம்பத் கணவர் மைண்ட் வாய்ஸ்:
"எலிமினேட் ஆகி வந்தப்புறம், என்கிட்ட ஒவ்வொரு சம்பவமா சொல்லி அதுல என்னோட கருத்தை கேட்பாளே..
கன்னுக்குட்டியை நான் என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியலையே" என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

காலுல சுளுக்குன்னு சொன்னாளாம்
ஆடத் தெரியாத சிலுக்கு காலுல சுளுக்குன்னு சொன்னாளாம். அந்த மாதிரில இருக்கு இந்த அனிதா சம்பத் சொல்றது. டியர் அனிதா நீங்க ஒரு நல்ல பொண்ணு அப்டின்னு உங்க வாய்ல காட்டாதிங்க செயல்ல காட்டுங்க. உனக்கு சனி உன் வாய் தான். செம பன்ச் கொடுத்தார் கமல். உங்களுக்கு வேணும்னா தனியா கூப்ட்டு வச்சு சொல்லிருங்க... என்று கூறி விளாசியுள்ளார்.

என்னை பேச விடல..
வரம் கொடுத்த தலையிலேயே கைய வச்ச கதையா?
கமல்ஹாசன் தலையிலேயே அனிதா சம்பத் கையே வச்சிட்டா. என்னை பேச விடல, ஒருபட்சமாக பேசுறார்.. என அனிதா பேசியதை சொல்லி திட்டி தீர்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஒரு பக்கம் பேசுறதே அதிகம்
அனிதா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா.. இவங்க தான் பக்கம் பக்கமா பேசுவாங்க .. கமல் சார் ஒரு பக்கம் பேசுறதே அதிகம்! என அனிதா சம்பத்தை நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

புஷ்பா புருஷனுக்கு பிறகு
அனிதா புருஷனுக்கு கோவில் கட்டி கும்பிட சொல்லுங்க. இதை எல்லாம் வச்சு குடும்பம் நடத்துறது ரொம்ப கஷ்டம்
நல்லது செய்யனும்னு நினைக்குறவங்களையும் சந்தேகமாக பார்க்கும் மன நிலை கொண்டது. பாவம் அனிதா புருஷன்
புஷ்பா புருஷனுக்கு பிறகு தமிழ்நாட்டுல ஃபேமஸாக இருப்பது அனிதா புருஷன்தான் என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

கமல்கிட்டயே ஆரம்பிச்சுட்டியா?
ஆண்டவரே அனிதாக்கு முதல்ல இருந்தே ஸ்பேஸ் கொடுக்க மாட்டிக்கிறீங்க.. உன்னோட வேலையை ஹவுஸ் மேட்ஸ் கிட்ட தான் காட்டிகிட்டு இருந்த இப்ப கமல் கிட்டயே காட்ட ஆரம்பிச்சிட்டியா.. நேத்து அவர் பேச வரும் போது பேசல, வேண்டாம்ன்னு சொல்றாரு விடாமா பேசுற.. வெளிய வந்து சைக்யாட்ரிட் பாரு என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

போக நேரம் வந்துவிட்டது
அனிதா சம்பத் இவ்வளவு காலம் நீங்க இரிட்டேட்தான் பண்ணீங்க எப்போ கமல் சாரையே குற்றம் சொன்னீங்களோ கமல் சார் இவ்வளவு தரக்குறைவாக பேசினீங்களோ அப்பவே நீங்க எப்படி பட்ட கேரக்டர் என புரிந்து கொள்ள முடிகிறது. போக நேரம் வந்துவிட்டது என சாடியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஏத்தி விட வாய்ப்பிருக்கு
சனம் இனி அனிதாவோட எதிரி. அவர் கமல் ஐஸ் டிஸ்ப்பாயிண்ட்டட் வித் யூன்னு உண்மையை சொல்லிட்டாள். இப்போ பாலா, சுச்சி வந்து எங்களுக்கும் அப்படி தான்னு அனிதாவை ஏத்தி விட வாய்ப்பிருக்கு. இவ வேற அவங்க கூட சேர ரொம்ப ட்ரை பண்றா.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

திருந்த வாய்ப்பில்லை
கமல்ன்னாலயே அனிதாவ தாங்க முடியல." 2 நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க பேசிட்டிங்கன்னு முடிச்சிட்டாரு. இப்போ அம்மா கமல் மேலையே பிராது வைக்குது. நீ திருந்த மாட்ட. சீக்கிரம் வெளிய போனா தான் தெரியும், அப்பவும் திருந்த வாய்ப்பில்லை. இந்த சீசன்ல முதல் சண்டையை ஆரம்பிச்ச பெருமையும் உன்னுடையதுதான் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வாயை மூடுன்னு சொல்லிட்டாரு
அனிதா சொல்கிறார் முதல் வாரத்துல இருந்தே கமல் பேசவே விடலையாம்.. நல்லவேளை.. கமல் வாயை மூடுன்னு சொல்லிட்டாரு என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தக்காளி சட்னியா?
‘தவளை தன் வாயால் கெடும் ‘. அது போல் தான் அனிதா செய்கிறார் . அவர் யாரை பற்றியும் பேசலாம், ஆனால் மற்றவர்கள் பேசினால் அது பிடிக்காது. அனிதா உனக்கு வந்தால் ரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என விளாசியுள்ளார்.

தயவு செஞ்சு அனுப்பிடுங்க
நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன் தயவு செஞ்சு அனிதாவ வீட்டுக்கு அனுப்பிருங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











