அன்பு ஒன்றுதான் அனாதை.. முகென் டயலாக்கை வாங்கியடித்த அனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: அனிதா சம்பத் பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.

சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் ஆரம்பம் முதலே மக்கள் என்ன நினைப்பார்களோ என்ற கான்ஷியஸுடன் இருந்தார் அனிதா. தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடமும் மோதலில் ஈடுபட்டு வந்தார்.

டாஸ்க்கில் சிறப்பு

டாஸ்க்கில் சிறப்பு

இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்தபோதும் டாஸ்க்கில் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் இருந்தது.

பிக்பாஸிலிருந்து வெளியேற்றம்

பிக்பாஸிலிருந்து வெளியேற்றம்

இருப்பினும் ஒரு கட்டத்தில் ஆரி என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளாமல் அவரிடம் நாக்கை துருத்தியும் கைகளை நீட்டியும் கடும் கோபமாக நடந்து கொண்டார். இதனால் கடுப்பான மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

அனிதா சம்பத் போட்டோக்கள்

அனிதா சம்பத் போட்டோக்கள்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத், தொடர்ந்து தனது பிக்பாஸ் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

அன்பு ஒன்றுதான் அநாதை

அன்பு ஒன்றுதான் அநாதை

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் அறந்தாங்கி நிஷாவுடன் தானும் தனது கணவரும் எடுத்த போட்டோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அன்பு ஒன்றுதான் அநாதை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வெளியே வாங்க

வெளியே வாங்க

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா முகென் ராவ் சொன்னதையெல்லாம் வாங்கி அடிக்கிறீங்க என்று கேட்டுள்ளனர். மேலும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியே முடிந்துவிட்டது, இன்னமும் நீங்கள் அதில் இருந்து வெளியே வரவில்லையா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X