பொண்ண வச்சு நெகட்டிவ் இமேஜ சரிபண்ண பாக்குறாங்க.. என்ன ஜென்மம் என அர்ச்சனாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் கொண்டாட்ட புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை பங்கம் பண்ணியுள்ளனர்.
பிரபல தொகுப்பாளினியான அர்ச்சான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பெயரை டேமேஜ் செய்து கொண்ட பிரபலங்களில் அவரும் ஒருவர்.

அன்புதான் ஜெயிக்கும்
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா, அன்புதான் ஜெயிக்கும் எனக்கூறி தனக்கென ஒரு கேங்கை ஃபார்ம் செய்து கொண்டு விளையாடினார். மேலும் ஆரிக்கு எதிராகவும் மற்ற ஹவுஸ்மேட்டுகளை திரட்டினார்.

வாங்கிக்கட்டிய அர்ச்சனா
வாரா வாரம் ஆரியை நாமினேட் செய்வதையும் அவரை ஜெயிலுக்கு அனுப்புவதையும் அவரை டாமினேட் செய்வதையுமே வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வாங்கிக் கட்டினார்.

பிரபலமான டயலாக்
நிஷாவிடம் அவர் ஆவேசமாக பேசிய அன்பு ஜெயிக்கும்னு நம்புறீயா என்று அவர் பேசிய வசனம் பெரும் பிரபலம். அந்த டயலாக்கை வைத்து அர்ச்சனாவை படு பங்கமாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மகளுடன் சேர்ந்து
இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் டேமேஜ்ஜான தனது பெயரை அந்த டயலாக்கை வைத்து சரி செய்ய முயன்றுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து ஒரு கான்செப்ட் செய்துள்ளார்.

முடிவு பண்ண முடியாது..
அதில் அன்பு தோத்துருச்சும்மா என்று அழும் அர்ச்சனாவுக்கு, வெறும் 67 நாள்ல உன் அன்ப முடிவு பண்ண முடியாது என கூறுகிறார் அவரது மகள் ஸாரா. இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றியுள்ளனர்.

போலி அன்பு ஜெயிக்காது
பிக்பாஸ் கொண்டாட்டம் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிச்சயமா இந்த டிராமாவை தவிர்த்துவிட்டுதான் நிகழ்ச்சியை பார்ப்போம். போலியான அன்பு எப்போவுமே ஜெயிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

ஜீரணிக்க முடியவில்லை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், முதல்ல ஸாராவுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அர்ச்சனாதான் அவருடைய பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, அர்ச்சனா ஒரு பாஸி மற்றும் ஒரு பொறாமை கொண்ட நபர் என்பதும், ஆரி வென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று சாடியுள்ளார்.

ஸ்டைலில் டேக் இட்டு..
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் அவரது மகளின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், ஜெலுசில் பாட்டில் இமேஜை ஷேர் செய்து அம்மாவுக்கும் மகளுக்கும் இது தேவை என்று குறிப்பிட்டு ரியோ ஸ்டைலில் டேக் இட்டு என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்கர் லெவல் நடிகர்கள்
புரமோவில் அர்ச்சனா மற்றும் அவரது மகளின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், ஆஸ்கர் லெவல் நடிகர்கள்.. சூப்பர் அம்மா.. எக்ஸ்ட்ராடினரி குழந்தை.. ஒத்த ரோசா புள்ளையா.. ரொம்ப நல்லா வளருதுக என பதிவிட்டுள்ளார்.

யாரு ஜெயிக்கணும்னு..
மற்றொரு நெட்டிசனான இவர், ஆரி வின்னிங் மொமென்ட்ல உங்க அன்பு நல்லா தெரிஞ்சுச்சு. அர்ச்சனா நீங்க பிக்பாஸ் டாஸ்க்ல யாரு ஜெயிக்கணும்னு பாடு பட்டிங்கன்னு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

என்ன ஜென்மம்னு தெரியல
அர்ச்சனாவின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பொண்ண வச்சு தன்னோட நெகட்டிவ் இமேஜ்ஜ சரி பண்ணிக்க பாக்குது இதெல்லாம் என்ன ஜென்மம்னு தெரியல.. விஜய் டிவி சூப்பரா செம்பு அடீக்கிறாங்க அர்ச்சனாவுக்கு.. ஆரிய ட்ரோல் பண்ண எல்லாத்தையும் அர்ச்சனா பொண்ணு லைக் பண்ணுமாம்.. இப்ப நம்ம. கிட்ட கதை சொல்லுமாம்.. என்று கூறியுள்ளார்.

டேமேஜ் கன்ட்ரோல் பண்றீங்களா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ்னு ஒரு நிகழ்ச்சியை போட்டு இவனுங்க கேரியரையே க்ளோஸ் பண்ணிட்டு இப்போ டேமேஜ் கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்றீங்களாடா விஜய் டிவி என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











