சொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானர் அர்ச்சனா. தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அர்ச்சனா.

ஒப்பந்தத்தால் அழுத்தம்

ஒப்பந்தத்தால் அழுத்தம்

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என கூறப்பட்டது. ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செய்திருந்த ஒப்பந்தம் காரணமாக, அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

போட்டியாளர்களுக்கு பட்டம்

போட்டியாளர்களுக்கு பட்டம்

இதனால் சட்ட சிக்கல்களை எல்லாம் பேசி தீர்த்த அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்கள் கழித்து வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே போட்டியாளர்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என பட்டங்களை கொடுத்தார்.

அன்பு ஜெயிக்கும்

அன்பு ஜெயிக்கும்

டம்மி பட்டாசு, காணவில்லை, ஷோ கேஸ் பொம்மை போன்ற பட்டங்களை கொடுத்தார். இதனால் போட்டியாளர்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்து போதும் அன்பால் பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றுவேன் என அன்பு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து விளையாடினார்.

அன்பு கேங்.. லவ் பெட்..

அன்பு கேங்.. லவ் பெட்..

மேலும் அன்பு கேங், லவ் பெட் என்று உருவாக்கி பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கென ஒரு அணியை வைத்துக் கொண்டு அதிகாரமாய் வலம் வந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா, தானும் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து தொகுப்பாளரை போன்று நடந்து கொண்டார்.

குட்டு வைத்த கமல்

குட்டு வைத்த கமல்

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஃபாலோ பண்ணிய சில பிரபலங்கள் கூட அர்ச்சனா என்ன பிக்பாஸா என்று கேட்டு வந்தனர். இதனை கவனித்த கமல், நீங்களும் போட்டியாளர் தான், ஆங்கரிங் பண்ண வரவில்லை என குட்டு வைத்தார்.

மானஸ்தனாய் இருங்கள்

மானஸ்தனாய் இருங்கள்

அதன்பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் தனது தலைமையிலான கேங்கின் மூலம் ஆரியை டார்கெட் செய்து கார்னர் பண்ணினார். ஆரியை மானஸ்தனாய் இருக்க வேண்டும், முறை மாமன் என பல வார்த்தைகளை கூறி விமர்சித்தார்.

டஃப் கன்டெஸ்டென்ட்

டஃப் கன்டெஸ்டென்ட்

இதனால் ரசிகர்களின் கடுப்புக்கு ஆளானார் அர்ச்சனா. இருந்த போதும் டாஸ்க்கில் சிறப்பாய் செயல்பட்டு வந்ததால டஃப்பான கன்டெஸ்டென்ட் என பார்க்கப்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ரீஎன்ட்ரியின் போதும்

ரீஎன்ட்ரியின் போதும்

பிக்பாஸ் வீட்டுக்குள் கேங் உருவாக அர்ச்சனாதான் காரணம், நிகழ்ச்சி கெடவே அவர்தான் காரணம் என அவரை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இதனால் டிவிட்டர் தளத்தில் இருந்தே ஓட்டம் பிடித்தார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்த போதும் ஆரி மீது அவருக்கு இருந்த கோபம் தெரிந்தது.

ஃபினாலேவில் நடனம்

ஃபினாலேவில் நடனம்

இதனால் மீண்டும் விமர்சனத்துக்கு ஆளானார் அர்ச்சனா. இந்நிலையில் பிக்பாஸ் ஃபினாலேவில் நடனம் ஆடிய அர்ச்சனா அப்போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சிறகுகளை கத்தரிக்க..

சிறகுகளை கத்தரிக்க..

அந்த போட்டோவுக்கு, மக்கள் உங்களைத் திணறடிக்க முயற்சிப்பார்கள், மக்கள் உங்கள் சிறகுகளை கத்தரிக்க முயற்சிப்பார்கள், ஆனால் நீங்கள் உயர்ந்த மற்றும் வலிமையான இடத்தில் சேர வேணடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதை எதுவும் தடுக்க முடியாது! என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

பிரிந்து போக இது காதல் இல்லை! Aariக்கு Nisha வாழ்த்துக்கள் - Filmibeat Tamil
சூன்யம் வச்சுக்கிட்டீங்களே..

சூன்யம் வச்சுக்கிட்டீங்களே..

இதனை பார்த்த பலரும் சரியாக சொன்னீர்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், இந்த லுக்கில் ராணி மாதிரி இருக்கிறீர்கள் என்றும் பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர், தேவையில்லாமல் டீம்மாக ஆரியை கார்னர் செய்து சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிட்டீங்களே என்றும் அன்பு ஜெயிக்கும் என்றும் கூறி அதகளம் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X