அப்பா.. கேமராப்பா.. காசுப்பா.. கோச்சிக்காதீங்கப்பா.. நிஷாவையும் அர்ச்சனாவையும் வச்சு செய்றாங்களே!

சென்னை: நான் மக்களை மகிழ்விக்கத் தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தேன்னு நிஷா வாயாற சொன்னாலும், அவர் செயலில் இதுவரை பெருசா எதையும் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டையே ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

மற்றவர் நிழலிலேயே 67 நாட்களை நிஷா கடந்து விட்டார் என்றும், இன்னமும் தனித்துவ விளையாட்டை அவர் ஆடாமல், அர்ச்சனாவின் அடிமையாகவே உள்ளார் என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.

அப்பா சென்டிமென்ட்டை கையில் எடுத்துக் கொண்டு நிஷாவும் அர்ச்சனாவும் பண்ண அட்டகாசத்தை மீம் போட்டு பங்கம் படுத்தியுள்ளனர்.

மலேசியா நிஷா

நிஷா தான் இந்த வாரம் சூப்பர் பர்ஃபார்மன்ஸ், மலேசியா நிஷா இஸ் பேக் என எல்லோரும் அவரை எப்படித் தான் கேப்டன் பதவி போட்டிக்கு அனுப்பி காப்பாற்றுகிறார்கள் என்றே தெரியவில்லை. இந்த வாரம் கேப்டன் ஆகிட்டா, அடுத்த வாரமும் நிஷா எவிக்‌ஷனில் இருந்து எளிதாக தப்பித்து விடுவார் என்பது அந்த கேங்கின் திட்டம்.

உலகமகா நடிப்புடா சாமி

50 ரூபாய்க்கு நடிக்க சொன்னா, 50 ஆயிரம் ரூபாய்க்கு அர்ச்சனாவும் நிஷாவும் பிக் பாஸ் வீட்டில் ரொம்பவே ஓவரா நடிக்கிறாங்க என்றும், அம்மாடியோவ், இது உலகமகா நடிப்புடா சாமி என்றும் தேவையில்லாத விஷயங்களுக்கு நிஷா ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார் என்றும் விளாசி வருகின்றனர்.

எமோஷனல் பிளாக்மெயில்

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள், #Archana மற்றும் #Nisha என்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி இருவரையும் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். ஆரி தான் எல்லாத்துக்கும் காரணம் என கோர்த்துவிட்டு வந்த அர்ச்சனாவுக்கு, பாலா தான் கேம் பிளான் பண்ணது என்று தெரிந்ததும், கும்பிடு போட்டு, தம்பி நீ நல்லாருப்பியா தம்பி என்பது போல எமோஷனல் பிளாக் மெயில் செய்து வருவதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

கமல் கவனத்திற்கு

சனிக்கிழமை எபிசோடில் நிஷாவும், அர்ச்சனாவும் பண்ணிய அட்டகாசங்களை கமல் சார் கேட்கணும் என ஒரு லிஸ்ட்டையே போட்டு கொடுத்துள்ளார் இந்த நெட்டிசன். அனிதா மற்றும் பாலாவிடம் முட்டையை பயன்படுத்திய அர்ச்சனா, ஏன் அதை ரியோவுக்கும், நிஷாவுக்கும் பயன்படுத்தவில்லை, இதுக்குப் பேருதான் குரூபிசம் என்று அடித்து சொல்லி உள்ளார்.

இடியட் நிஷா

சோமுக்கு சுகமான ரோபோ, ஷிவானிக்கு மேக்கப் ரோபோ, ரம்யா பாண்டியனுக்கு சாஃப்ட் ஹர்ட் ரோபோன்னு பேர் வச்சிட்டு, அனிதா சம்பத் ஒவ்வொரு ரோபோவுக்கும் பட்டப்பெயர் வச்சு கூப்பிட்டது பிடிக்கல என சொல்வது என்ன ஒரு நியாயம் என்றும், அனிதா, நிஷா, பாலா மூவரும் சேர்ந்து தான் பட்டப்பெயர்களை தேர்வு செய்தார்கள் என குறும்படத்தையும் கமல் சார் போட்டுக் காட்டுவார் என்றும் நிஷா அனிதாவை டார்கெட் செய்து கண்ணாடி சிறைக்குள் தள்ளிவிட்டார் என அனிதா ஆர்மியினர் கொதித்து வருகின்றனர்.

Recommended Video

BHUMIகும் அனுஷ்காகும் உள்ள வித்யாசம் | DIRECTOR G. ASHOK CHAT | FILMIBEAT TAMIL

அப்பா கேமராப்பா

எல்லாத்தையும் விட பங்கமாக அப்பா மழையாக தெரிகிறார் என்று அர்ச்சனா சொன்னதும், நிஷா அப்பா ஸாரிப்பா என கத்தியது தான் ரசிகர்களால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. உங்க கேமுக்கு ஏன் அவர் பெயரை இழுக்கிறீங்க என்றும், அப்பா கேமராப்பா.. காசுப்பா.. கோச்சிக்காதீங்கப்பா.. அப்பா என பங்கமாக மீம் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X