என் பெயரை சொல்ல முடியாத அளவுக்கு விபூதி அடிச்சிருக்கேன்.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை மரண பங்கம் பண்ணியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது. இதில் மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியல் இன்றைய எபிசோடில் இன்னும் நீளும் என தெரிகிறது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக கோபத்தை சம்பாதித்துள்ள அர்ச்சனாவின் பெயர் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் இல்லை.

வச்சு செய்யலாம்
அர்ச்சனா நாமினேஷன் லிஸ்ட்டுக்கு வந்தால் வச்சு செய்யலாம் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவரது பெயர் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் அர்ச்சனாவை படு பங்கமாக கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அர்ச்சனா வந்தால்..
நாமினேஷன் லிஸ்ட்டில் நிஷாவின் பெயர் இடம் பெற்றிருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் கண்டிப்பாக நிஷா தான் வெளியே செல்ல வேண்டும்.. அதுவே அர்ச்சனா வந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பஞ்சாயத்து இருக்கு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எபிசோட் பார்த்து விட்டு தெளிவா பேசலாம். ஆனா ஒன்னு சனம் ஷெட்டிக்கும் ஆரிக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்குது. ஆனா நம்ம போகஸ் சோம்ம சேவ் பண்ணுறது தான் என கூறியுள்ளார்.

விபூதி அடிச்சுருக்கேன்
அர்ச்சனாவின் பெயர் நாமினேஷனில் இடம் பெறாததை பார்த்த இந்த நெட்டிசன், என் பெயரை சொல்ல முடியாத அளவுக்கு எல்லோருக்கும் விபூதி அடிச்சுருக்கேன் இனி எனக்கு பயமில்லை.. என அர்ச்சனாவை நக்கலடித்துள்ளார்.

அடேங்கப்பா
கேம் ஆட உள்ள வாங்கன்னு கூப்பிட்டா உலகத்திலேயே கண்டுபிடிக்க முடியாத அம்மாவாகவும், அண்ணன், தங்கையாகவும், தம்பியாகவும் என்னாம நடிக்கிறீங்க!... அடேங்கப்பா.. என அர்ச்சனா, ரியோ மற்றும் நிஷா ஆகியோரை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

நாங்க குத்துவோம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உள்ளே நீங்க ஆரி ஆரின்னு நாமினேட் பண்ணலாம்!... நாங்களும் ஆரி ஆரி ன்னு ஆரிக்கு குத்துவோம் என ஆரிக்குதான் ஓட்டு போடும் என கூறியுள்ளார்.

வந்தால் அவுட்
புரமோவை பார்த்த இவர், இரவு தூங்கும் முன் எல்லோருக்கும் திருநீறு பூசி தூங்க வைக்கும் அர்சனாவை யாருமே நாமினேட் செய்ய மாட்டாங்க. ஒருமுறை லிஸ்ட்டில் வந்தாலும் அவுட்தான் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ராஜா வீட்டு கன்னுக்குட்டி
புரமோவில் கன்னுக்குட்டி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், கன்னுகுட்டி நம்ம அனிதாதானே யாரு அந்த ராஜா வீட்டு கன்னுகுட்டி கான்செப்ட்டுல இல்லாத பெயரா இருக்கு என கிண்டலாக கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தூக்கலாம்னு..
மற்றொரு நெட்டிசனான இவர், நாங்க முடிவு பண்ணிட்டோம் நிஷாவை தூக்கலாம்னு!... நிஷா உள்ள இருந்தா பாம் வைம்போம்!... பாம்! என மிரட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











