கும்பலா கூடி அடுத்தவங்களை வெளியே அனுப்பும் போது இனிச்சிச்சோ.. அர்ச்சனாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் ரியோவுடன் பேசும் அர்ச்சனா யார் யாரை நாமினேட் பண்ணி வெளியே அனுப்பினார்கள் என கணக்கு போடுகிறார்.

மேலும் யார் நம்பர் கேம் ஆடுகிறர்கள்? எங்கு குரூப்பிஸம் உள்ளது என்றும் பாலாஜி கேங்கை குற்றம்சாட்டுகிறார் அர்ச்சனா. இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை வச்சு செய்கின்றனர் நெட்டிசன்கள்

நம்பர் கேம்..

நம்பர் கேம்..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இத்தனை நாளும் ஆட்களை வளைச்சு ஆட்டம்போட்டுவிட்டு இரண்டு ஆட்கள் குறைந்தவுடன் யாரு நம்பர் கேம் விளையாடுறாங்கன்னு கேட்கிறாங்க மம்மி டம்மி!.. வெளியே எங்களுக்குதான் உண்மை தெரியும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

லிஸ்ட்டை சொல்லுயா..

லிஸ்ட்டை சொல்லுயா..

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு சீக்கிரம் நாமினேட் லிஸ்ட்டை சொல்லுயா!... நாங்க ஆரிக்கு ஓட்டு போடனும்! என கூறுகிறார்.

தந்திரம் செய்வாரோ?

தந்திரம் செய்வாரோ?

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா ஆடு நாமினேட் ஆயிடுச்சி!.... இந்தவாரம் வெளியே போயே ஆகனும்!... ஆனா இந்த பெரியபாசு ஏதாவது தந்திரம் செய்வாரோ.. என கேட்டுள்ளார்.

சந்தர்ப்பவாத குரூப்பு

சந்தர்ப்பவாத குரூப்பு

தகுதி இல்லாத போட்டியாளர்கள் அப்படினு பார்க்கும் போது ஷிவானி, ஆஜித் இவங்களும் தான்.. ஆனா அவங்கள ரம்யா பாலாஜி, ஆரி யாருமே நாமினேஷன் பண்ணலபோல.. அர்ச்சனா குரூப் பண்ண அதே தப்பை தான் இந்த புது சந்தர்ப்பவாத குரூப்பும் பண்ணுறானுங்க என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

எங்களுக்கு அழகா புரியும்

எங்களுக்கு அழகா புரியும்

புரமோவில் அர்ச்சனா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா நீ என்ன பண்ணுனாலும் நீ எப்படியாப்பட்ட விஷம்ன்னு எங்களுக்கு அழகா புரியும் என கூறியுள்ளார்.

போன வாரம்தான் சரியில்ல

போன வாரம்தான் சரியில்ல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்க அணி 6-2=4
அந்த பக்கம் 4
கணக்கு சரியா இருக்கு!
கணக்கு போன வாரம் தான் சரியில்லமா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அப்போ இனிச்சிச்சோ..

அப்போ இனிச்சிச்சோ..

புரமோவில் அனிதா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க கும்பலா கூடி கூடி அடுத்தவங்களை நாமினேட் பண்ணி வெளிய அனுப்பும் போது இனிச்சிச்சோ என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இப்போ சொல்லுறீயே..

இப்போ சொல்லுறீயே..

அர்ச்சனா ஆயா இதுதான் இதுக்கு முன்னால் நீயும் உன்னை சுற்றியுள்ள நபர்கள் செய்தார்கள்... அப்போ நீ சொல்லல இப்போ உனக்கு வரும் போது தான் சொல்லுறீயே ஆயா! என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கடைசி வரைக்கும் தேறாது..

கடைசி வரைக்கும் தேறாது..

இன்னும் சோம், ரியோ இதுங்க திருந்தல போல.
அர்ச்சனா முந்தானைய புடிச்சிட்டே சுத்துதுங்க.
கடைசி வரைக்கும் தேறாது.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

திருந்தவில்லை..

திருந்தவில்லை..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஓப்பன் நாமிநேஷன் என்பதால் இவ்வளவு கணக்கு சொல்லுது அர்ச்சனா.. வழக்கம்போல் சோம சேகர் நீண்ட நாள் கழித்து ரியோ ஏழு வாரம் கழித்து அன்பின் அன்னை..மூவரும் நாமினேசணில் இருப்பார்கள் போல் தெரிகிறது... முடிவெடுக்க வேண்டியது மக்கள் தாம்.. கமல்ஹாசன் அவ்வளவு சொல்லியும் சோமு ரியோ திருந்தவில்லை என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

குரூப்பிஸம்ன்னா..

குரூப்பிஸம்ன்னா..

நாமினேட் பண்ணினத்துக்காகவே குரூப்பிஸம்னு சொல்லும் தாய்க்கிழவி, கூட சேர்ந்து பேசுறதோ கூட சேர்ந்து உட்க்காருவதோ இல்ல குரூப்பிஸம்.. மாறாக, நம்ம யார்கூட அதிக நேரம் இருக்கோமோ அவங்களுக்கு எதிரா எதுவுமே நம்ம பண்ணாம இருக்கிறதும் மற்றவர்களை பண்ணாம தடுக்கிறதுதான் குரூப்பிஸம் என வெளுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X